ராகுல் காந்தியை சந்திக்க விஜய் திட்டமா? திமுக கூட்டணியை உடைக்க மாஸ்டர் பிளான்?

  ராகுல் காந்தியை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், திமுக கூட்டணியை உடைக்க ‘மாஸ்டர் பிளான்’ போடப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை…

vijay rahul

 

ராகுல் காந்தியை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், திமுக கூட்டணியை உடைக்க ‘மாஸ்டர் பிளான்’ போடப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், அடுத்த மாதம் முதல் தமிழகமெங்கும் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணியை அமைக்கலாம் என்று விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென அதிமுக பாஜகவுடன் கூட்டு சென்றதால், அந்த கூட்டணியில் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், “விஜய்யை கட்சி ஆரம்பிக்க சொன்னதே ராகுல் காந்தி தான்” என்று விஜயதாரணி ஏற்கனவே பேட்டி அளித்திருந்தார். அதனால், விஜய்க்கும் ராகுல் காந்திக்கும் நல்ல நட்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் விஜய், ராகுல் காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்றும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்து தன்னுடன் கூட்டணி அமைத்தால், துணை முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என கூற திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்தால், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் வெளியே வரும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி அமைத்தால், அதிமுக, திமுக கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற முடியும் என்றும் விஜய்க்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவரது கட்சியின் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன.

தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் அதிசயம் நடக்குமா? விஜய்யின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? இவை எல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயங்களாக உள்ளன.