சிங்கம் வெளியே வந்தா காட்டு விலங்குகள் சிதறி ஓடும்.. தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கை நட்சத்திரம் விஜய்.. அவர் தோற்றால் அது மக்களின் தோல்வி.. TVK காமேஷ்

“தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கை நட்சத்திரம் விஜய் என்றும், அவர் ஒருவேளை இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் அது அவருடைய தோல்வி அல்ல, தமிழக மக்களின் தோல்வி” என்றும் TVK காமேஷ் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி…

tvk kamesh

“தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கை நட்சத்திரம் விஜய் என்றும், அவர் ஒருவேளை இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் அது அவருடைய தோல்வி அல்ல, தமிழக மக்களின் தோல்வி” என்றும் TVK காமேஷ் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஒருவர் வருகிறார். அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது தமிழக மக்களின் கடமை. ‘விஜய் தனித்து போட்டியிடும் முடிவு தவறானது, இது திமுகவின் வெற்றிக்கு வழி வகுக்கும்’ என்று சிலர் கூறுகின்றனர். அது வழி வகுக்காது என்று நம்புகிறோம். ஒருவேளை வழி வகுத்து திமுக வெற்றி பெற்றால், அது மக்களுடைய மாபெரும் தோல்விதான்” என TVK காமேஷ் தெரிவித்துள்ளார்.

“விஜய் அண்ணா என்பவர் தமிழக மக்களுக்கு ஒரு கடைசி நம்பிக்கை நட்சத்திரம்.” “விஜய் செய்வது மரியாதையான அரசியல். ‘முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே’ என்று மரியாதை உடன் தான் முதலமைச்சரை அழைக்கிறார். அவர் முதலமைச்சர் பெயரை சொல்லக்கூட பயப்படுகிறார் என்று சிலர் சொல்கின்றனர். ஆனால், அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் குத்தி காட்டி அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார். அவர் பிரச்சினைகளை மட்டும்தான் பேசுவார்.
‘பரந்தூர் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால் நானே விவசாயிகளை அழைத்துக்கொண்டு தலைமை செயலகம் வருவேன்’ என்று கூறினார். அவர் மட்டும் அவ்வாறு செய்தால் கைதாவார் என்பது தெரியும். அது தெரிந்தேதான் அவர் இவ்வாறு சொல்லி இருக்கிறார்” என்று TVK காமேஷ் தெரிவித்துள்ளார்.

“2026 தேர்தல் முடிந்தவுடன் அதிமுக, திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ‘நம்முடைய அடிப்படை ஓட்டுகளுக்கு விஜய் ஆப்பு வைத்துவிட்டார்’ என்று பேசுவார்கள். அது இப்போதே எனக்குத் தெரிகிறது” என TVK காமேஷ் தெரிவித்துள்ளார்.

“இரண்டு திராவிட அரசியல் கட்சிகளும் மக்களை மக்களாக பார்ப்பதில்லை, வாக்குகளாக தான் பார்க்கிறார்கள். ஆனால், விஜய் ஒருவர் மட்டும்தான் மக்களை உண்மையாகவே மக்களாக பார்த்து அவர்களுடைய பிரச்சனைகள் என்ன என்று பார்க்கிறார். அதனால் தான் அவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தவராக உள்ளார்” என்றும் TVK காமேஷ் தெரிவித்துள்ளார்.