வீட்டு கதவை தட்ட போகும் ஆபிசர்ஸ்.. மின்சார ரீடிங் முறையே மாறுது.. 3 முக்கிய மாற்றம்

By Keerthana

Published:

சென்னை: மின்சார வாரியத்திற்கான வருவாயை அதிகரிக்க புதிய திட்டங்களை புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மின்சார வாரியம், இம்மாதமே புதிய முறையில் ரீடிங் எடுக்க முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே மின் கட்டணம் ரூ.5ஆயிரத்துக்கு மேல் என்றால் டிஜிட்டல் மூலமே செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், ரீடிங் முறையிலும் மாற்றம்வரப்போகிறது.

தமிழகத்தில் சுமார் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு உள்பட மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக இருக்கிறது இவற்றிற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூல் செய்கிறது. இந்த மின் கட்டணத்தை பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு மட்டும் மின்சார வாரியம், மின்பயன்பாடு கட்டணம், புதிய இணைப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களை சேர்த்து மொத்தம் ரூ,60 ஆயிரத்து 505 கோடி வசூல் செய்திருக்கிறது.. அதில் ஆன்லைன் மூலமாக மட்டும் ரூ,50 ஆயிரத்து 217 கோடி வசூல் செயதிருக்கிறது. அதாவது மொத்த வசூலில் இது 83 சதவீதம் டிஜிட்டல் முறையில் வசூலித்துள்ளது.

அதன்படி மின் அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ,5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்றுஅரசு அறிவித்துள்ளது. இதன்படி 2 மாதத்தில் 1,275-க்கும் மேல் யூனிட் மின்சாரம் பயன்படுத்துவர்களுக்கு ரூ,10 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணத்தை கவுண்ட்டர்களில் காசோலை, டி.டி. அல்லது ஆன்லைன் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். அதாவது 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் அனைவரும் ஆன்லைன் அல்லது மின் அலுவலகங்களில் காசோலை, டி.டி. மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இது ஒருபுறம் எனில், தமிழ்நாட்டில் ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் புதிய நடைமுறை இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு வீட்டில், இரு மின் இணைப்பு இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாக கருதி, மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில், ‘சாப்ட்வேர்’ மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் ஒவ்வொரு பில் கணக்கீட்டின் போது, 100 யூனிட் இலவசம் ஆகும்.அதேநேரம் ஒரு வீட்டுக்கு, இரு இணைப்பு பெற்றிருந்தால், தலா, 100 யூனிட் இலவசமாக கிடைக்கும். அதேபோல், ஒரே வணிக கட்டிடங்களுக்கு இரு இணைப்பு இருக்கும் போது, மின் கட்டணமும் குறைவாக வரும். இத்தகைய விஷயங்களை சரி செய்தால் மின் வாரிய இழப்பை தடுக்க முடியும் என்பதால் இப்படி முடிவு செய்துள்ளளது. ஒரே வீட்டுக்கு இரு மின் இணைப்பு இருந்தால், 100 யூனிட் மட்டுமே கழித்து, மற்ற யூனிட்டுகளுக்கு கட்டணம் விதிக்கப்ட உள்ளதாம்.

அடுத்தாக மின்சார களப்பணியாளர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள் மற்றும் கட்டணம் செலுத்திய இணைப்புகள் பற்றிய விபரங்களை அறிய முடியும். மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட மற்றும் கணக்கு எடுக்கப்படாத விபரத்தை அவர்கள் அறிய முடியும். மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு அல்லது அதிகரிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் பற்றி அறிய முடியும். மின்னகம் சேவை மையம், இணையதளத்தில் மின்சார சேவை தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார் மற்றும் அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிந்து கொள்ள முடியும்.