விஜய்யின் 2வது இன்னிங்ஸ் ஆரம்பம்.. இந்த முறை இறங்கி அடிக்க போகிறார்.. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுவை.. தவெக தேசிய கட்சியாக வளரும்.. இனிமேல் தான் சம்பவமே இருக்குது.. இன்றும் தவெக – திமுக இடையே தான் போட்டி.. ராவுத்தர் இப்ராஹிம் பேட்டி..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தை தொடர்ந்து, அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளை முறியடித்து, வரும் அக்டோபர்…

ibrahim rawthar

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தை தொடர்ந்து, அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளை முறியடித்து, வரும் அக்டோபர் 17ஆம் தேதி கரூரில் மீண்டும் களமிறங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணம், தவெகவின் அடுத்தகட்ட அரசியலை தீர்மானிக்கும் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, விஜய்யின் கரூர் பயணத்தின்போது மக்கள் அவரை ‘முளைப்பாரி எடுத்து’ வரவேற்று, கிட்டத்தட்ட ஒரு கடவுளை போலக் கொண்டாடினர். இந்த சம்பவத்துக்கு பிறகு, “விஜயைத் தோற்கடித்துவிட்டோம், அவரது அரசியல் முடிந்துவிட்டது” என்று எதிர்த்தரப்பினர் பேசிய நிலையில், அக்டோபர்17ஆம் தேதி அவர் மீண்டும் கரூருக்கு செல்வது, ‘சாமியை வீழ்த்திவிட்டதாக சொன்னவர்களுக்குப்பதில் அடியாக’ இருக்கும் என்று அரசியல் பார்வையாளர் ராவுத்தர் இப்ராஹிம் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பெரும் அசம்பாவிதம் மற்றும் நீதிமன்ற விமர்சனங்களுக்கு பிறகு விஜய் மிகவும் உறுதியாகவும், தெளிவான படிப்பினைகளுடனும் இருப்பதாக கூறிய ராவுத்தர் இப்ராஹிம் , தன்னை வீழ்த்த நினைத்தவர்களின் முயற்சிகள் அனைத்தையும் அவர் கூர்ந்து கவனித்ததாகவும், இனி “சண்டை போடுவதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்” என்ற ரீதியில் களமிறங்க தயாராவதாகவும் கூறியுள்ளார்.

தவெகவின் தொண்டர்களான ‘வாரியர்ஸ்’ கண்ணுக்கு தெரியாத எதிரிகளாக சமூக ஊடகங்களில் மிகவும் ஷார்ப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்த கரூர் விவகாரத்தில் கூட தகவல்களை திரட்டி அவர்கள் செயல்பட்டதாகவும் கூறிய ராவுத்தர் இப்ராஹிம், விஜய்யின் இந்த புதிய பயணம், வாரியர்களை அடுத்தகட்ட அரசியல் செயல்பாட்டிற்கு தயாராகுமாறு உற்சாகப்படுத்தும் விதமாக இருக்கும் என்றும் கூறினார்.

விஜய்யின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டுக்குள் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விஜய் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வரும் செய்திகள், ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது. “கை எங்கள் கைக்குள்தான் இருக்கிறது” என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசியது, விஜய்யின் எழுச்சி தி.மு.க.வை அச்சுறுத்துவதையே காட்டுவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் ராகுல் காந்திக்கு ஓட்டுக்களை பெற்றுத்தர மு.க. ஸ்டாலினை கூட்டி செல்வதா அல்லது விஜய்யை கூட்டிச் செல்வதா என்று முடிவெடுக்க நேரிட்டால், விஜய்யை கூட்டி செல்வதையே ராகுல் விரும்புவார் என்று ராவுத்தர் இப்ராஹிம் கருத்து தெரிவித்தார்.

தவெகவை தமிழ்நாட்டுக்குள் மட்டும் இல்லாமல் தேசிய கட்சியாக வளர்ப்பதற்கான முனைப்பில் விஜய் இறங்கியிருப்பதாகவும், அதற்கான ஆதரவு மற்றும் செயல் திட்டங்களை ஒரு குழு அமைத்து அவர் பகுப்பாய்வு செய்து வருவதாகவும் கூறிய ராவுத்தர் இப்ராஹிம்,
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, தவெக மீதும் விஜய் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு எதிரான அரசியலை முறியடிக்கத் தமிழக அரசு முனைப்பு காட்டுவதாகவும் கூறினார்.

தி.மு.க.வின் வரலாற்றுத் தவறுகளை போலவே, விஜய் விஷயத்திலும் அ.தி.மு.க., தேமுதிக ஆகியோரை போலவே நடந்து கொள்வதாக கூறிஒய ராவுத்தர் இப்ராஹிம், எம்.ஜி.ஆரை இழந்து அ.தி.மு.க.வை உருவாக்க அனுமதித்ததும், விஜயகாந்தை புரட்சிக் கலைஞர் என்று கருணாநிதியே பெயரிட்ட பிறகு, அவரே எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதும் தி.மு.க.வின் தவறுகள் என்று சுட்டிக்காட்டினார்.

இன்று அதேபோல விஜய்யை கை வைத்திருப்பதன் மூலம், தி.மு.க. 2026-ல் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நிலையை தானே உருவாக்கி கொள்கிறது என்றும், தவெக எழுச்சியானது இளைஞர்களை அதிகளவில் அரசியலுக்குள் கொண்டு வந்துள்ளது என்றும் ராவுத்தர் இப்ராஹிம் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

இன்று அ.தி.மு.க., பா.ஜ.க., ஏன் தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளுமே விஜய்யை தங்கள் பக்கம் கொண்டுவர விரும்புகின்றன. இதுவே அரசியலில் அவரது வலிமையை காட்டுகிறது. இருப்பினும், விஜய் பா.ஜ.க. பக்கம் போவதற்கோ அல்லது தி.மு.க.வை தோற்கடிக்காமல் விடுவதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக ராவுத்தர் இப்ராஹிம் கூறினார்.

இறுதியாக கரூர் பயணத்தின் மூலம் விஜய் தனது அரசியல் “இரண்டாம் இன்னிங்ஸை” வலுவாக தொடங்கவுள்ளார். இந்த நெருக்கடி நிறைந்த தருணங்களை சமாளிப்பதன் மூலம், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை தவெக ஏற்படுத்தும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ராவுத்தர் இப்ராஹிம் கூறினார்.