வீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்களை அதிர வைத்த சம்பவம்.. சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னையில் தூக்கத்தில் குளிர் சாதன பெட்டியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்தார். காப்பற்ற முயன்ற மனைவிக்கும், மகளுக்கும் பாய்ந்த மின்சாரம் பாய்ந்துள்ளது. வீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்கள் தயவு செய்து நடந்த…

Husband dies due to electrocution after touching hand on refrigerator in Chennai

சென்னை: சென்னையில் தூக்கத்தில் குளிர் சாதன பெட்டியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்தார். காப்பற்ற முயன்ற மனைவிக்கும், மகளுக்கும் பாய்ந்த மின்சாரம் பாய்ந்துள்ளது. வீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்கள் தயவு செய்து நடந்த சம்பவத்தை பாருங்கள்..

வீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்கள் தயவு செய்து அதனை முறையாக பராமரியுங்கள். பிரிட்ஜை பராமரிக்காமல் விட்டால் பெரிய ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது. பிரிட்ஜ் வைக்கும் ஸ்விட்ச் போர்டுகள் மிகவும் சரியானதாக இருக்க வேண்டும். தண்ணீர் இறங்கும் பகுதியில் மின்சாரம் தாக்கும் உள்ளதால் அந்த பகுதியில் பிரிட்ஜ் வைக்கக்கூடாது.

அதேபோல் மின்சார விஷயத்தில் மக்கள் அதிக விழிப்புணர்வு தேவை . பிரிட்ஜ் இன்றியமையாதது தான் மறுப்பதற்கில்லை ஆனால் 4-7 ஆண்டுகளில் எல்லா வீட்டு மின்சார பொருட்களும் ஏதோ ஒரு வகையில் பழுதடையும். பழுதானால் எலக்ட்ரீசியனை வைத்து பார்க்க வேண்டும்.. அப்படி பார்க்காவிட்டால் உயிரே போய்விடும். சென்னை கேகே நகரில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கேகே நகரில் யாரோ ஒருவர் இலவசமாக பழைய பிரிட்ஜை கொடுத்துள்ளார்கள். அதை வாங்கி ஏழை வெல்டர் ஒருவர் வாங்கி பயன்படுத்தியுள்ளார். அந்த பிரிட்ஜில் பழுது இருந்து வந்துள்ளது. அவ்வப்போது தொட்டால் எர்த் அடிக்கும் வகையில் பிரச்சனை இருந்துள்ளது. இந்த பிரச்சனை மட்டுமின்றி வீட்டில் இருந்த பிளக் பாய்ண்டும் பழுதாகி உடைந்து கிடந்தது. இப்படியான சூழலில் பிரிஜ்சும் பராமரிப்பு இன்றி இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெல்டரான அவர் தூங்கி உள்ளார். பிரிட்ஜ் மீது தெரியாமல் கைப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை பார்த்த மகள் மற்றும் மனைவி கதறி அழுதபடி, உடன அவரை பிடித்து இழுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனே வீட்டின் மெயின் லைனை ஆப் செய்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மின்சாரம் லீக் இருந்தால் உடனே எலக்ட்ரீசியனை வைத்து பிரிஜ் உள்ளிட்ட எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பராமரிப்பது நல்லது. இல்லாவிட்டால் வீணான பொருள் என்று தெரிந்தால் தூக்கி எறிந்துவிடுங்கள். பராமரிக்க முடியாதவற்றை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம்.