விண்ணை முட்டும் தங்கம் விலை: அதிர்ச்சியின் நகை பிரியர்கள்!!

கடந்த சில நாட்களாவே தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் இன்றைய தினத்திலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,632 ரூபாய்க்கு நேற்று…

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

கடந்த சில நாட்களாவே தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் இன்றைய தினத்திலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,632 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்படது. தற்போது கிராமுக்கு ரூ.8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 37,120-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,053- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,062-ஆகவும் பவுனுக்கு ரூ. 40,496 ஆக விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலையானது 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி 62.30 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.62.300 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன