சென்னை:மின்சார கட்டணம் செலுத்தும் கடைசி தேதி திடீரென பலருக்கு மறந்து போகிறது. அதனால் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு செல்லும் மின் வாரிய அதிகாரிகள். வீட்டில் மின் இணைப்பை துண்டிக்கிறார்கள். பியூஸ் கேரியரை பிடுங்கி சென்றுவிடுவார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு வந்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது நினைவூட்டல் குறுஞ்செய்தியை கடைசி 3 நாட்களுக்கு முன்னதாக யூபிஐ UPI இணைப்புடன் அனுப்ப உள்ளது. குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்தி தாமதக் கட்டணத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. நீங்கள் அமேசான் பே, கூகுள் பே, பேடிஎம் போன்றவற்றின் மூலம் ஒருமுறை இபி கட்டணம் செலுத்தி இருந்தால் கூட உங்களுக்கு அதன் வழியாக நினைவூட்டல் எஸ்எம்எஸ் வந்துவிடும்.
உங்கள் மின் கட்டணம் எவ்வளவு என்பதை பார்க்க முடியும். அடிக்கடி நினைவூட்டலும் தெரிந்துவிடும். எனவே இனி பியூஸ் கேரியரை பிடுங்கி செல்லும் நிகழ்வுகள் உங்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை.. மின் வாரியம் இந்த விஷயத்தில் நல்ல முடிவினை எடுத்துள்ளது.
இது ஒருபுறம் எனில், தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிமையாக்கி உள்ளது. மின் கட்டணம் செலுத்த முதல் மின்சார வாரிய அலுவலகத்திற்கு முன்பு போல் செல்ல தேவையும் இல்லை.. அதற்கான அவசியமும் இல்லை. முதன் முதலில் இணையதளத்தில் சென்று யூசர் நேம், பாஸ்வேர்டு போட்டு செலுத்த வேண்டியது இருந்தது. இப்போது அதுவும் தேவையில்லை..
யுபிஐ இல் உங்கள் மின்நுகர்வோர் எண்ணை பதிவு செய்தாலே குறுஞ்செய்தியாக மின் கட்டணம் வந்துவிடும். நீங்களும் மின் கட்டணத்தை எளிதாக செலுத்திவிடலாம். இதுதவிர வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்தது. இதன்படி மின் கட்டணத்தை தற்போது வாட்ஸ் அப் வழியாக செலுத்த முடிகிறது.
இதைத் தொடர்ந்து இணையதள வசதி வந்ததும் ஒவ்வொரு சர்வீஸ் எண்ணிற்கும் யூசர் நேம், பாஸ்வேர்டு தரப்பட்டது. இதை வைத்து இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது.
வாட்ஸ் ஆப்பில் Tangedco இலச்சினை மற்றும் பச்சை குறியீடு ✅ இருக்கும். மேலும் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்த முடியும். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் வரும். அதில் View Bill, Pay bill என வரும். முதலில் வியூ பில்லை கிளிக் செய்தால் உங்கள் மின் கட்டணம் பிடிஎஃப்பில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அந்த கட்டணத்தை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு pay bill என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் அமேசான் பே, போன் பே, கூகுள் பே அல்லது டெபிட் கார்டு, நெட் பேங்கிங் என எது வேண்டுமோ அதை ஓபன் செய்து பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
சில நேரங்களில் மின்சார கட்டணம் கட்டுவதற்காக கடைசி நாள் வந்தாலும் சிலருக்கு நினைவில் இல்லாமல் இருப்பதால், மின் ஊழியர்கள் வந்து மின் இணைப்பை துண்டிப்பர் (fuse carrierஐ எடுத்து சென்றுவிடுவார்கள்.) இந்நிலையில் தான் ஒவ்வொரு மின் நுகர்வோர்களுக்கும் மின் கட்டணம் செலுத்த விதிக்கப்பட்ட கடைசி நாளுக்கு 3 நாட்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்ட போகிறார்கள். அதில் யூபிஐ லிங்கும் இருக்கும். இதன் மூலம் எந்த இடையூறும் இல்லாமல் முன் கூட்டியே சரியான நேரத்திற்கு மின் கட்டணத்தை செலுத்த முடியும்.