நேற்று மாசி மகம் மற்றும் வளர்பிறை நாள் என்பதால், 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், விஜய் பனையூர் சென்றுகொண்டிருந்தபோது, நிர்வாகி ஒருவர் அவரது காரை வழிமறித்து மனுவை கொடுக்க முயன்றதாகவும், ஆனால் அந்த மனுவை விஜய் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
கட்சியில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி என்று விஜய் கூறிய நிலையில், தற்போது வேறு கட்சிகளில் இருந்த பிரபலங்கள் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்த தொழிலதிபர்களுக்கு பதவி வழங்கப்படுவது, கட்சியின் நீண்டகால நிர்வாகிகளை திருப்தி அடைய செய்துள்ளது.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும், ஒரு பெண் நிர்வாகி கட்சிக்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவழித்துள்ளார். ஆனால், திடீரென அந்த பகுதியின் மாவட்ட செயலாளர் பதவி, ஒரு தொழிலதிபருக்கு வழங்கப்பட இருப்பதாகவும், இதனால், அந்த பெண் நிர்வாகி அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், விஜய்யின் டிரைவர் ராஜேந்திரன் மகனுக்கு, சென்னை தெற்கு பிரிவின் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கட்சிக்குள் உட்கட்சி பூசல் உருவாகியுள்ளது. அந்த பகுதியில் பல ஆண்டுகளாக நற்பணிகள் செய்து வந்த ஒருவருக்கு பதவி வழங்காமல், விஜய்யின் டிரைவர் மகனுக்கு வழங்கியது, கட்சி உறுப்பினர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்கத்திற்காக உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி கொடுப்போம் என்று கூறிய விஜய், தற்போது புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்குவதால் விஜய்யின் கட்சிக்குள் கோஷ்டி பிரச்சனை உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால், இந்த சூழ்நிலையை சமாளிக்க விஜய் ஒரு பக்கா பிளான் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எந்த பகுதியில் நிர்வாகிகள் அதிருப்தியடைந்தார்களோ, அந்த பகுதியில் கூடுதல் பதவிகள் உருவாக்கி, அவர்களுக்கு வழங்குவது குறித்து விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.