சமந்தாவும் உருட்டும்.. நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.. டாக்டர்கள் எச்சரிக்கை

By Keerthana

Published:

சென்னை: நடிகை சமந்தா சொல்வது போல் Hydrogen Peroxideய், Nebulizerல் கலந்து உள்ள இழுத்தால், நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.

சமந்தா சொல்றா மாதிரி ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றை கலந்து உள்ள இழுத்தால், நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

சமந்தா அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தல், ‘நெபுலைசர்’ என்ற கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அத்துடன் “ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது” என்று கூறியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மருத்துவர்கள் பலர் கடும் எதிர்வினையாற்றினார்கள். டாக்டர் தில்லி என்பவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் ” சமந்தா சொல்றா மாதிரி Hydrogen Peroxideய், Nebulizerல் கலந்து உள்ள இழுத்தால், நுரையீரல் மொத்தமாக பாதிக்க படும். இது COVID கால கட்டத்தில் இருந்து உலாவரும் ஒரு விஷயம். இதை பின் பற்றி பல பேரு பாதிப்புக்கு உள்ளாகினர். Hydrogen Peroxide வீட்டு சுத்தம் செய்ய பயன்படும் ஒரு chemical(cleaner&disinfectant). கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருள்களை எந்நாளும் நம் உடம்பிற்குள் எடுத்து கொள்வதில்லை, அதேய் போல் சமந்தா சொல்லும் இந்த Hydrogen peroxide நம் Nebulizeril கலந்து உள்ளெடுக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

இதனிடையே விளக்கம் அளித்த சமந்தா, அனுபவமில்லாமல் போகிற போக்கில் நான் எந்த சிகிச்சையையும் வலுவாக பரிந்துரைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக நான் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் பரிந்துரை செய்தேன்..நல்ல நோக்கத்துக்காக இதை செய்தேன். என்னுடைய பதிவை தாக்கியும், என்னுடைய நோக்கத்தை தவறாக சித்தரித்தும் கருத்துகளை பகிர்ந்ததை அறிந்தேன். பணம் ஈட்டும் தவறான நோக்கமும் எனக்கு. நான் கற்ற அனுபவத்திலிருந்து, பரிந்துரைத்தேன் செய்தேன் என்றார்.