தமிழ்நாட்டில் 2023-24-ம் நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? மலைக்க வைத்த விவரம்

By Keerthana

Published:

சென்னை: 2023-24-ம் நிதி ஆண்டில் ஜி எஸ் டி வரி வசூல் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் கோடி என்று தமிழக அரசின் வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் மதுவிற்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டுவது ஜிஎஸ்டி வரி வசூல் மூலமாக நடக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரும் ஜிஎஸ்டி வரியை பெறுத்தவரை மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்க தனித்தனியாக செல்கிறது.

இதில் மாநில அரசுக்கான நிதி நேரடியாக வந்துவிடும். மத்திய அரசுக்கு போகும் நிதி, சாலை, ரயில், கல்வி உள்பட பல்வேறு வகையில் திரும்ப வரும். அதேநேரம் குறிப்பிட்ட அளவு நிதி, மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு செலவு செய்யும்.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் 2023-24-ம் நிதி ஆண்டில் ஜி எஸ் டி வரி வசூல் நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விவரங்கள் பின்வருமாறு

தமிழகத்தில் மாநில நிதி ஆதாரங்களை திரட்டுவதில் முன்னோடியாக வணிக வரித்துறை விளங்குகிறது. அரசின் சொந்த வரி வருவாயில் 73.5 சதவீதம் வணிகவரித் துறை மூலம் பெறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வணிக வரித்துறை மூலம் வசூலிக்கப்படும் வரித்தொகை அதிகரித்து வருகிறது.

ஜி எஸ் டி இழப்பீடு இல்லாமல் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரூ,85 ஆயிரத்து 867.86 கோடியும், 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.97 ஆயிரத்து 856.83 கோடியும், 2022-2023-ம் நிதியாண்டில் ரூ,1 லட்சத்து 17 ஆயிரத்து 435.48 கோடியும், 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 5.92 கோடியும் வணிக வரித்துறை மூலம் வரியாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 2020 – 2021-ம் நிதியாண்டில் 26.95 லட்சம் எண்ணிக்கையில் ஆவண பதிவு நடைபெற்றது. இதன் முலம் அரசுக்கு ரூ,10 ஆயிரத்து 643 கோடி வருவாய் கிடைத்தது. 2023 – 2024-ம் நிதியாண்டில் 33.22 லட்சம் எண்ணிக்கையில் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ,18 ஆயிரத்து 825 கோடி வருவாய் கிடைத்துள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.