சீட் வேண்டாம்.. பொன்முடி, ஐ பெரியசாமி, மா சுப்பிரமணியன் திடீர் முடிவு? களமிறங்கும் உதயநிதியின் இளைஞர் படை.. சவுக்கு சங்கர் கூறும் அதிர்ச்சி தகவல்..

திமுகவில் உள்ள சீனியர் அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு வரும் தேர்தலில் சீட் வேண்டாம் என சொல்வதாகவும், குறிப்பாக பொன்முடி, ஐ.பி. பெரியசாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நிற்க முடிவு செய்திருப்பதாகவும் அரசியல்…

stalin

திமுகவில் உள்ள சீனியர் அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு வரும் தேர்தலில் சீட் வேண்டாம் என சொல்வதாகவும், குறிப்பாக பொன்முடி, ஐ.பி. பெரியசாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நிற்க முடிவு செய்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் சீட் வேண்டாம் என்று சொல்வது மட்டுமின்றி, அரசியலில் இருந்தே ஒதுங்க போவதாக கூறப்பட்டு வருகிறது என்றும், சமீபத்தில் திமுக எடுத்த கருத்துக்கணிப்பில் ஏழு அமைச்சர்கள் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கிட்டத்தட்ட நான்கு அமைச்சர்கள் சீட் வேண்டாம் என திமுக தலைமை இடம் சொல்லி இருப்பதாகவும் சவுக்கு சங்கர் கூறியதும் பொருத்தமாகி வருகிறது.

மற்ற தேர்தல்கள் மாதிரி 2026 ஆம் ஆண்டு தேர்தல் கிடையாது என்றும், திமுக, அதிமுக தவிர விஜய்யும் சேர்ந்ததால் மும்முனை போட்டியில் கடுமையாக இருக்கும் என்றும், இதில் பல முக்கிய பிரமுகர்கள் 100 முதல் 1000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைய வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். எனவே தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றுதான் வரும் தேர்தலில் திமுகவின் சீனியர் அமைச்சர்கள் போட்டியிட தயங்குவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், திமுகவில் உதயநிதியின் இளைஞர் படை களமிறங்க இருப்பதாகவும், கிட்டத்தட்ட பாதி தொகுதிகளில் இளைஞர் அணியின் நிர்வாகிகள் தான் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே வரும் தேர்தல் நாளடைவில் உதயநிதியா, விஜய்யா? என்ற மாறிவிடும் என்றும், அதில் ஜெயிப்பது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக, பாஜக கூட்டணியில் வேறு ஏதாவது கட்சிகள் சேர்ந்தால் மட்டுமே அந்த கூட்டணி டேக் ஆப் ஆகும் என்றும், இல்லையென்றால் அந்தக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு வரும் என்றும், போட்டி திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் என மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.