ஓடி வருகிறார்.. உதய சூரியன்.. இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு கிடைத்த கௌரவம்..

இசை முரசு என இசை ரசிகர்களாலும், திராவிடத் தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்தான் பாடகர் நாகூர் இ.எம்.ஹனிபா. இராமநாதபுரத்தில் பிறந்தவராயினும் இவரது தந்தையின் சொந்த ஊர் நாகூர் என்பதால் தனது பெயருடன் நாகூர் என்பது ஓட்டிக்…

Nagore Hanifa

இசை முரசு என இசை ரசிகர்களாலும், திராவிடத் தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்தான் பாடகர் நாகூர் இ.எம்.ஹனிபா. இராமநாதபுரத்தில் பிறந்தவராயினும் இவரது தந்தையின் சொந்த ஊர் நாகூர் என்பதால் தனது பெயருடன் நாகூர் என்பது ஓட்டிக் கொண்டது.

இளம் வயதிலேயே பாடத் துவங்கிய நாகூர் ஹனிபா 15 வயதில் தனியாகக் சச்சேரி செய்யும் அளவிற்கு கற்றுத் தேர்ந்தார். 1930-ல் திராவிட இயக்கத்தில் இணைந்த இவர் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர்.

இவரது சிறப்பம்சமே இவரது கணீர் குரல் தான். முதன் முதலாக 1953-சினிமாவில் பாடத் துவங்கிய நாகூர் ஹனிபா பெரும்பாலும் இஸ்லாமியப் பாடல்களே அதிகம் பாடியிருக்கிறார். இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான பாடலாக இன்றும் விளங்குகிறது. மேலும் ரம்ஜான் என்றாலே எல்லோரும் கொண்டாடுவோம்.. அல்லாவின் பெயரைச் சொல்லி… என்ற இவர் பாடல் தான் ஞாபகத்திற்கு வரும்.

நாலாபுறமும் சூழ்ந்த வெள்ளம்.. துரிதமாகச் செயல்பட்ட ரயில்வே அதிகாரி.. உயரிய விருது வழங்கி கௌரவிக்ககும் ரயில்வே..

இஸ்லாம் சார்ந்த பல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய நாகூர் ஹனிபா இளையராஜாவுக்கு முதன் முதலில் தனது கச்சேரிகளில் வாய்ப்புக் கொடுத்தார். இளையராஜா சில நாட்கள் நாகூர் ஹனிபாவின் கச்சேரிகளுக்கு இசையமைத்திருக்கிறார். அதன்பின் இளையராஜா இசையில் ராமன் அப்துல்லா படத்தில் இடம்பெற்ற உன் மதமா.. என் மதமா ஆண்டவன் எந்த மதம்.. மற்றும் செம்பருத்தி படத்தில் நட்ட நடுக் கடல் மீது.. போன்ற பாடல்களைப் பாடியிருக்கிறார்.

திரைப்படங்களிலும், பக்திப் பாடல்களும் குறைந்த அளவே பாடியிருந்தாலும் இவர் அதிகமாகப் பாடியிருந்தது திராவிட இயக்க கொள்கைப் பாடல்கள் தான். குறிப்பாக அண்ணாவை வரவேற்க இவர் பாடிய ஓடி வருகிறார் உதய சூரியன் பாடல் இன்றும் திமுக-வின் எவர்கிரீன் பாடலாக ஒலிக்கிறது.

மேலும் திமுக-வின் மூத்த தலைவராகவும், பல போராட்டங்களில் சிறை சென்றும் கட்சிக்காக உழைத்த நாகூர் ஹனிபா தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராகவும் பதவி வகித்தார். தற்போது நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா அடுத்த வருடம் கொண்டாடப் பட உள்ளது.

இதனை முன்னிட்டு தமிழக அரசு நாகூர் ஹனிபாவைப் போற்றும் வகையில் நாகப்பட்டினத்தில் உள்ள தைக்கால் தெரு மற்றும் புதிதாக அமையவுள்ள பூங்காவிற்கு நாகூர் ஹனிபாவின் பெயரைச் சூட்டி அவருக்கு பெருமை சேர்க்க உள்ளது.