தமிழக அரசியல் குறித்து அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் டெல்லி ராஜகோபாலன், “விஜய்யுடன் திருமாவளவன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் சந்தேகப்படுகிறார் என்றும், ராகுல் காந்தியை காங்கிரஸ் எம்.பி. ஒருவர் சந்தித்து விஜய் கூட்டணிக்கு ஒப்புதல் வாங்கிவிட்டதாகவும், காங்கிரஸ் மற்றும் வி.சி.க. சென்றுவிட்டால் என்ன ஆகுமோ என்று தி.மு.க. பதறிக் கொண்டிருப்பதாகவும்” கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் இருந்தாலும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவ்வப்போது பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருபவர் மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன். இவர் இன்றைய தமிழக அரசியல் குறித்து கூறியபோது, “தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக உடையும் என்றும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் வெளியேறுவது உறுதி” என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தின் முக்கிய காங்கிரஸ் எம்.பி. ஒருவர் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்ததாகவும், அப்போது விஜய்யுடன் கூட்டணி சேர்வதால் ஏற்படும் லாபம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் ராஜகோபாலன் கூறினார். ஏற்கனவே விஜய் கட்சி ஆரம்பிக்க ராகுல் காந்திதான் ஐடியா கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், “விஜய்யுடன் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக திருமாவளவன் மீது முதல்வர் ஸ்டாலின் சந்தேகப்படுகிறார் என்றும், அதற்காகத்தான் அவசர அவசரமாக பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்” அவர் கூறினார். “தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சென்றுவிட்டால், அதன் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தானாக சென்றுவிடும் என்றும், மீதமுள்ள கட்சிகளை வைத்து தி.மு.க.வால் எதுவும் செய்ய முடியாது” என்றும் தெரிவித்தார்.
“நம்மால் தி.மு.க. கூட்டணியை பிரிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, விஜய் பிரித்தால் கூட ஓகேதான்” என்று அமித்ஷா பச்சைக்கொடி காட்டி இருப்பதாகவும், “அவரை பொறுத்தவரை தி.மு.க.வை வேரோடு அழிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருக்கிறது” என்றும் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
“வரும் தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தான் இருக்கும் என்றும், அதேபோல் விஜய் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் என்றும், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் மேலும் கட்சிகள் சேர வாய்ப்பு இல்லை” என்றும் அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ராஜகோபாலன் கூறுவது போல், இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், விஜய் கூட்டணி மிக எளிதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
