டெல்லியில் அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பாக டெல்லி அரசுக்கும் டெல்லியின் துணைநிலை ஆளுநருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது.
இந்நிலையில் டெல்லியில் அதிகாரிகளை நியமனம் செய்யவும் இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு அதிகாரிகளை நியமனம் செய்ய மத்திய அரசுக்கே உரிமை உண்டு என்று அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்து இருந்தது.
இந்த அவசர சட்டத்தை எதிர்க்க ஆதரவு திரட்டிட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அந்த மாநில முதல்வர்களின் ஆதரவை திரட்டி வருகிறார். மத்திய அரசுக்கு எதிரான எதிர் கட்சிகளின் ஆதரவை திரட்டி வரும் நிலையில் இன்று தமிழகம் வந்து நம் தமிழக முதல்வர் அவர்களை மாலை சந்தித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவருடன் வருகை புரிந்து இருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் இருவரும் நம் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் “டெல்லி அரசுக்கு மாநில ஆளுநர் மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மத்திய அரசின் இந்த அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கிறது” என மத்திய அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்ப்பதாகவும் டெல்லி மாநில அரசுக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
