சென்னையிலிருந்து தீபாவளிக்குச் சொந்த ஊர் போறீங்களா? இந்த ரூட்ல மட்டும் போகாதீங்க.. அமைச்சர் அட்வைஸ்..

By John A

Published:

சென்னை : வருகிற அக்டோபர் 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கடைகளில் இப்போதே கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் ஆர்வமுடன் ஷாப்பிங் செய்கின்றனர். மேலும் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1 அன்றும் விடுமுறை என்பதால் மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை உள்ளதால் பலரும் சொந்த ஊருக்குப் படையெடுக்க இப்போதே தயாராகி விட்டனர். ஏற்கனவே தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. இந்நிலையில் சொந்த ஊர் செல்பவர்களின் ஒரே வழி அரசுப் பேருந்துகள் தான்.

தீபாவளிப் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 14086 பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் சென்னையிலிருந்து மட்டும் 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

16 செல்வங்கள் என்னென்ன தெரியுமா? பட்டியடிலிட்டு மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

மேலும் இதில் 3 நாட்களில் சுமார் 5.83 லட்சம் பயணிகள் சொந்த ஊர் செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் சென்னை மாநகரில் ஏற்படும். குறிப்பாக குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் என ஆரம்பித்து செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் சென்னை நகரை விட்டு வெளியேற திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு மற்றும் வண்டலூர் ரிங் ரோடு வழியாக வெளியேறலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியிருக்கிறார்.