இன்று DD தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா எதற்கு என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நிகழ்ச்சியை நடத்துக் கூடாது எனவும் வலியுறுத்தின. ஆளும் திமுக அரசும் மாணவரணி சார்பில் போராட்டத்தினை நடத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. தலைமை தாங்கினார்.
அப்போது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது அதில்
“தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்..” என்ற வரியை விட்டு பின் அடுத்த வரிகளைப் பாடினர். ஏற்கனவே இந்தி தின விழாவிற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்திலும் குறிப்பிட்ட திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணித்தது தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்தது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஆளுநருக்கு எதிராக கடும் கண்டத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதில்,
“ஆளுநரா? ஆரியநரா?
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
நாட்டிலேயே முதன் முறையாக பெங்களுரில் பறக்கும் டாக்ஸி திட்டம்.. கட்டணம் எவ்ளோ தெரியுமா?
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டு விட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!” இவ்வாறு அந்தப் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.