சென்னையின் இந்த முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்திற்கு தடை.. என்ன காரணம்?

  சென்னை உள்பட பெரு நகரங்களில் இருசக்கர வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சென்னை-பெங்களூர் விரைவு சாலையில் இருசக்கர…

road

 

சென்னை உள்பட பெரு நகரங்களில் இருசக்கர வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னை-பெங்களூர் விரைவு சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூர் வரை 260 கிலோமீட்டர் தூரத்தில், சமீபத்தில் கிரீன் பீல்ட் விரைவு சாலை திட்டம் அமல்படுத்தப்பட்டது. ரூ.17,900 கோடி மதிப்பில் இந்த சாலை அமைக்கப்பட்ட நிலையில், சென்னை-பெங்களூர் பயண நேரத்தை ஏழு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக குறைத்துள்ளது. இந்த சாலையில் மணிக்கு 120 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நான்கு வழிச்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்கும் இந்த சாலை, ஆந்திரா எல்லை வரை 260 கிலோமீட்டர் செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்த சாலையில் மகேஷ் என்பவரும் அவரது குடும்பத்தினரும் இருசக்கர வாகனத்தில் பயணித்து கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களின் பைக் ஒரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் பைக் ஓட்டிய மகேஷ் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை-பெங்களூரு விரைவு சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மாற்று வழி பாதையும் அறிவிக்கப்பட்டுள்ளது.