தொப்புள் கொடி வெட்டிய விவகாரம்.. மருத்துவமனைக்கு தண்டனை ஓகே.. அப்போ இர்பானுக்கு என்ன?

பிரபல யூடியூபர் இர்பான் தனது யூடியூப் பக்கத்தில் தனது மனைவியின் பிரசவத்தின் போது அதனை வீடியோவாகப் பதிவு செய்து குழந்தையின் தொப்புள் கொடியையும் கத்தரிக்கோலால் வெட்டினார். இந்தக் காணொளியை பார்த்த பலர் இர்பானுக்குக் கடும்…

Irfan Youtuber

பிரபல யூடியூபர் இர்பான் தனது யூடியூப் பக்கத்தில் தனது மனைவியின் பிரசவத்தின் போது அதனை வீடியோவாகப் பதிவு செய்து குழந்தையின் தொப்புள் கொடியையும் கத்தரிக்கோலால் வெட்டினார். இந்தக் காணொளியை பார்த்த பலர் இர்பானுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள புனிதமான உறவை கொச்சைப் படுத்தும் நோக்கில் வீடியோ வெளியிட்டதாகப் புகார் எழ, ஊரக மருத்துவ நலப் பணிகள் இயக்குநர் இர்பான் மீதும், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது, டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும் இர்பான் இந்த வீடியோவையும் தனது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஏற்கனவே குழந்தையின் பாலினம் குறித்து துபாயில் ஸ்கேன் செய்து அறிவித்திருந்த நிலையில் அடுத்த சர்ச்சையிலும் சிக்கினார் இர்பான். மேலும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த சிம்பிளான உடற்பயிற்சி போதும்.. ரிஸ்க் இல்லாமல் உடல் பருமனைக் குறைக்கும் டிப்ஸ்

இந்நிலையில் பிரசவ வீடியோவிற்கு அனுமதித்த சென்னை ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாட்கள் மருத்துவம் செய்ய தடை விதித்து மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டார். மேலும் உள்நோயாளிகளாகத் தங்கியிருப்பவர்களுக்கு மருத்துவம் செய்யத் தடை இல்லை எனவும், மருத்துவமனைக்கு ரூ. 50,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மருத்துவமனைக்கு தண்டனை வழங்கிய வேளையில் இர்பான் மீது என்ன நடவடிக்கை என நெட்டிசன்கள் கமெண்டுகளில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதுபோன்ற செயல்களால் மருத்துவப் பணியாளர்கள் தவிர அடுத்தவர்களும் கேமராவைத் தூக்கிக் கொண்டு பிரசவ அறைக்குச் செல்லும் வகையில் இந்த வீடியோ ஊக்கப்படுத்துவதால் இனி இதுபோன்ற வீடியோக்களை எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் பொதுமக்கள் என வலியுறுத்தியுள்ளனர்.