Group 2 | டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வர்களே, செலக்ட் ஆகியும் வேலை கிடைக்காமல் போகலாம்.. இதை பாருங்க

By Keerthana

Published:

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத்தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற போகிறது.

தமிழ்நாட்டின் அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

இதேபோல் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2ஏ பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஒட்டு மொத்தமாக குரூப் 2, குரூப் 2 ஏவில் 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 14.9.2024 அன்று நடைபெற போகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 19ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பலர் ஒர நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால், சில பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு நாள் கூடுதலாக காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த 20ம் தேதி கூடுதலாக ஒரு நாள் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.

இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், எத்தனை பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான் முதல்நிலைத்தேர்வை எழுத சுமார் 7 லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பித்த தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களில் வருகிற 24 முதல் 26-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

மேலும், கூடுதல் விவரங்களை பட்டதாரிகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் செய்ய வேண்டிய திருத்தங்களை சரியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால், கடைசியில் எல்லாவற்றிலும் வென்றாலும் வேலை கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. விண்ணப்பங்களை செய்யும் சிறு தவறு கூட பின்னாளில் வேலைக்கே சிக்கலாகும் வாய்ப்பு உள்ளது. நிறைய பேர் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே விண்ணப்பங்களில் உள்ள தவறுகளை சரி செய்வது நல்லது.