பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் கட்சி ஆகிய மூன்று கட்சிகளையும் தி.மு.க. திட்டமிட்டு வளர்க்கிறது என்றும், இந்த மூன்று கட்சிகளும் தி.மு.க.வை எதிர்ப்பதால் தி.மு.க.வின் எதிர்ப்பு ஓட்டு சிதறுகிறது என்றும், அதனால் தான் அ.தி.மு.க. தோல்வி அடைந்து வருகிறது” என்றும் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு முனை போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது. நான்கு முனை போட்டி உறுதி செய்யப்பட்டால், தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் மூன்று பகுதியாக பிரியும் என்பதால், தி.மு.க. மிக எளிதில் வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைப்பார் என்றும் அரசியல் வியூக நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதைத்தான் சமீபத்தில் பேட்டி அளித்த ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
“பாரதிய ஜனதா, விஜய் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளையும் தி.மு.க. திட்டமிட்டு வளர்த்து வருகிறது என்றும், இந்த மூன்று கட்சிகள் வளர வளர தி.மு.க.வுக்கு லாபம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க.வின் எதிர்ப்பு வாக்குகள் பிரிவதால் எளிதாக தி.மு.க. வெற்றி பெற்றுவிடும்” என்றும், “தற்போது பாரதிய ஜனதா, அ.தி.மு.க. இணைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணியில் விஜய் மற்றும் சில கட்சிகள் இணைந்தால் தி.மு.க.வின் பாடு திண்டாட்டம்” என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, நான்கு முனைப் போட்டி என்றால் தி.மு.க. மிக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்றும், ஆனால் அதே நேரத்தில் இரண்டு முனை அல்லது மூன்று முனைப் போட்டி என்றால் தி.மு.க. தோல்வியடைய வாய்ப்பு உண்டு” என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரங்கராஜ் பாண்டேவின் கருத்தை பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “நான்கு முனை போட்டி என்று கணக்கிடவே தேவையில்லை என்றும், இதிலிருந்து சீமானின் நாம் தமிழர் கட்சியை கழட்டிவிடலாம்” என்று கூறி வருகின்றனர். “சீமானுக்கு கடந்த தேர்தலில் எட்டு சதவீதம் வாக்குகள் இருந்தாலும், அவருடைய கட்சியின் பெரும்பாலான ஓட்டுகள் தற்போது விஜய்க்கு செல்வதால், வரும் தேர்தலில் அவருக்கு நான்கு சதவீதம் கூட தேறாது என்றும், எனவே சீமான் கட்சியை ஒரு கூட்டணியாகவே எண்ண தேவையில்லை” என்றும் கூறி வருகின்றனர்.
அவ்வாறு இருக்கும்போது, “தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என்ற மூன்று கூட்டணிகள் தான் களத்தில் இருக்கிறது என்றும், மூன்றும் கிட்டத்தட்ட சம வலிமையுடன் இருப்பதால் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்றும், இப்போதைக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை அறுதியிட்டு உறுதியாக கூற முடியாது” என்றும் தெரிவித்து வருகின்றனர்.
“தி.மு.க. கூட்டணி தற்போது வலுவாக இருந்தாலும், அதில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுமா, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேருமா அல்லது விஜய் கூட்டணி தனித்து நின்று வெற்றி பெறும் அளவுக்கு வளருமா” என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
DMK Deliberately Fostering BJP, Naam Tamilar, and Vijay’s Party to Split Opposition Votes
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
