ஒரு சின்ன விஷயம் கூட அமித்ஷாவுக்கும் குருமூர்த்திக்கும் தெரியவில்லை.. அண்ணாமலை இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாது.. சின்னப்பா கணேசன்..!

அண்ணாமலையின் ஆதரவு இல்லையென்றால் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாது என்றும், அண்ணாமலை தான் இன்றைய இளைஞர்களின் ஹீரோவாக இருக்கிறார் என்றும், அவர் தான் பாரதிய ஜனதா கட்சியை இந்த அளவுக்கு வளர்த்தவர் என்றும்,…

annamalai 1

அண்ணாமலையின் ஆதரவு இல்லையென்றால் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாது என்றும், அண்ணாமலை தான் இன்றைய இளைஞர்களின் ஹீரோவாக இருக்கிறார் என்றும், அவர் தான் பாரதிய ஜனதா கட்சியை இந்த அளவுக்கு வளர்த்தவர் என்றும், அவரை பகைத்து கொண்டால் கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமியால் முதல்வராக முடியாது என்றும் அரசியல் விமர்சகர் சின்னப்பா கணேசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணாமலையை ஆதரிக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது; அவர் சொன்னால் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்க ஒரு இளைஞர் படை இருக்கிறது. ஆனால், அண்ணாமலையை அதிமுக-பாஜக கூட்டணியினர் ஒதுக்கி வைக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி அவர் போட்டியிடும் தொகுதியிலும், அவர் தேர்வு செய்யும் வேட்பாளர்களுக்கும் கண்டிப்பாக அண்ணாமலை ஆதரவாளர்களின் ஓட்டுகளும் தேவைதான். அதற்காக அவர் அண்ணாமலையை அரவணைத்து செல்வதுதான் நல்லது. ஆனால், அவர் கொஞ்சம்கூட மதிக்கவே இல்லை. இதனால் அவருக்குத்தான் நஷ்டம் என்றும் சின்னப்பா கணேசன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் பதவியை மாற்றியது தவறு என்றும், அநேகமாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடைந்தவுடன் மீண்டும் அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக மத்தியில் உள்ளவர்கள் மாற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அண்ணாமலையை வைத்துதான் தமிழக பாஜக என்ற ஒரு சின்ன விஷயம் கூட அமித்ஷாவுக்கும் குருமூர்த்திக்கும் தெரியவில்லை என்றும், அவர்கள் என்னதான் கருத்துக்கணிப்பை எடுத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், அதிமுக-பாஜக கூட்டணியினர் அண்ணாமலையை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், குறிப்பாக அதிமுகவில் உள்ள நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையை தினந்தோறும் ட்விட்டரில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். அதைக் கூட எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியவில்லை. பிறகு எப்படி அவருடைய கட்டுப்பாட்டில் கட்சி இருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கூட்டணி கட்சி தலைவர் ஒருவரை தன்னுடைய கட்சியை சேர்ந்தவரே தரக்குறைவாக பேசினால் கூட்டணிக்குத்தானே நஷ்டம் என்ற ஒரு அடிப்படை உண்மை கூட எடப்பாடி பழனிசாமிக்கு புரியவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மொத்தத்தில், அதிமுக-பாஜக கூட்டணி திமுக கூட்டணிக்கு வலுவானது அல்ல என்றும், திமுக கூட்டணி தற்போது வெற்றி நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்றும் சின்னப்பா கணேசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.