சட்டப் பேரவையில் சூடுபிடித்த அண்ணா பல்கலை விவகாரம்.. அதிமுகவிற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

சட்டப்பேரவை வீதி 5-இன் கீழ் பேரவை உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். சட்டப் பேரவையில் இன்று அண்ணா பல்கலைக்கழக…

EPS vs Stalin

சட்டப்பேரவை வீதி 5-இன் கீழ் பேரவை உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

சட்டப் பேரவையில் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சட்டப்பேரவைக்கு வருகை தரும் போதே அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வந்தனர். மேலும் டங்ஸ்டன் திட்டததிற்கு எதிராகவும் டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம் போன்ற வாசகம் அடங்கிய முகக்கவசம் அணிந்து வந்தனர். சட்டப் பேரவையின் மூன்றாம் நாளான இன்று விதி 5-ன் கீழ் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

கட்சிக்கு ஒரு உறுப்பினர் வீதம் இவ்விவகாரம் குறித்துப் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, அதிமுக கூறி வரும் யார் அந்த சார்? வாசகத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தைக் குறிப்பிட்டு ‘சார் ஆட்சி’ என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் பேசும் போது “அந்த பெயரை சொல்லி அந்த பெயருக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்த விருப்பமில்லை. ஏனென்றால் எங்களையெல்லாம் ஆளாக்கியவர் அவர். அந்த உணர்வோடு அந்த பெயரை தவிர்த்து…சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக் கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிர்ந்த மதுரை.. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக 11 கிராம மக்கள் திரண்ட பேரணி..

பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று சட்டப்படி நியாயம் பெற்றுத்தரக் கூடிய ஒரு காரியத்தை தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக, உறுதியாக, ஆணித் தரமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

குற்றம் நடந்த பிறகு ஒருவேளை குற்றவாளியை கைது செய்யாமல் விட்டிருந்தாலோ, அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ, நீங்கள் அரசை குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரத்தை திரட்டிய பிறகும், அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்திற்காகத் தானே தவிர, உண்மையான அக்கறை இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தினையும் அதற்கு அப்போதிருந்த அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.