விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் குமாரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது குழுவில் நான்கு அதிகாரிகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஏ எஸ் குமாரி அவர்கள் விசாரணை நடத்தியதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு இரண்டு பெண்கள் உள்ளானது உண்மை என்று தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது