தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, கோதுமை மானிய விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும் வரப்பிரசாதமாக ரேஷன் கடைகள் இருக்கின்றன. மேலும் ரேஷன் கடைகளில் டீத்தூள், சோப்பு, உப்பு, மளிகை சாமான்கள் போன்ற பொருட்களும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.
தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் முன்கூட்டியே பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் அமுதம் அங்காடிகள் மூலமும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வழக்கமான மார்க்கெட் விலையைக் காட்டிலும் அமுதம் அங்காடிகளில் பொருட்கள் வாங்குவதால் அதிக பணம் மிச்சமாகிறது. இதனால் பலர் பயன்பெறுகின்றனர்.
லேப்டாப், கம்ப்யூட்டர், டேப் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!
இந்நிலையில் உணவுத்துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று அமுதம் பிளஸ் தீபாவளித் தொகுப்பினை அறிமுகப்படுத்தி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
ரூ. 500 மதிப்புள்ள அமுதம் பிளஸ் தொகுப்பில் 3.8 கிலோ எடை அளவில் 15 வகையான பொருட்கள் அடங்கியுள்ளது. இதில் சமையலுக்குத் தேவையான பாசி பருப்பு, கொண்டைக் கடலை, கடுகு உளுந்து, மிளகு, வெந்தயம், சீரகம், இதர பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கியுள்ளன.
இத்தொகுப்பானது அமுதம் அங்காடி மற்றும் அமுதம் ரேஷன் கடைகளில் மட்டும் கிடைக்கிறது. இந்தத் தொகுப்பினை வெளிச் சந்தையில் வாங்கும் போது இதன் மதிப்பு ரூ. 650 வரை இருக்கும். ஆனால் அமுதம் அங்காடிகளில் ரூ.499-க்கு கிடைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 150 வரை மிச்சமாகிறது.