டெல்லியின் மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கையில் உள்ள உளவுத்துறை அறிக்கையில், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 140 தொகுதிகளும், திமுக கூட்டணிக்கு 80 தொகுதிகளும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனால் பாஜக மேலிடம் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணியின் தாக்கம்:
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானபோதே திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என்றும், அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டால் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுக கனவு கண்டிருந்ததாகவும், ஆனால் திடீரென இந்த கூட்டணி திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததாகவும் ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த கூட்டணிக்கு பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், எனவே இந்த கூட்டணி நாளுக்கு நாள் வலுவாக போகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
உளவுத்துறை அறிக்கை மற்றும் பாஜகவின் எதிர்பார்ப்பு:
இந்த சூழ்நிலையில் தான், உளவுத்துறை கொடுத்த சர்வேயில் அதிமுக கூட்டணிக்கு 140 தொகுதிகளும், திமுக கூட்டணிக்கு 80 தொகுதிகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டிருப்பதாகவும், இதனால் அமித்ஷா மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கூட்டணி ஆட்சிதான் என்பதை ஆரம்பம் முதலே அமித்ஷா அடித்து சொல்லி வரும் நிலையில், ஆட்சிக்கு வந்தால் என்னென்ன பதவிகளைக் கேட்கலாம், எந்த முக்கிய அமைச்சர் பதவிகளை தக்க வைத்து கொள்ளலாம் என்பது குறித்துத்தான் இப்போது ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நடுநிலை அரசியல் விமர்சகர்களின் மாறுபட்ட கருத்து:
ஆனால், ராஜகோபாலனின் இந்த கருத்துக்கு நடுநிலை அரசியல் விமர்சகர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மற்ற தேர்தல் போல் இது அதிமுக மற்றும் திமுக நேரடியாக மோதும் தேர்தல் இல்லை என்றும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இருப்பதால், அந்தக் கட்சியை ஒதுக்கிவிட்டு அதிமுகவுக்கு 140, திமுகவுக்கு 80 என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். கண்டிப்பாக தமிழக வெற்றி கழகத்திற்கு 50 முதல் 60 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர். எனவே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் தொங்கு சட்டசபைதான் ஏற்படும் என்றும், விஜய் யாருக்கு ஆதரவு தருகிறாரோ அந்த கூட்டணிதான் ஆட்சி அமைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உண்மைத்தன்மை குறித்த ஐயப்பாடுகள்:
டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் கூறும் உளவுத்துறை அறிக்கை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், அதிமுக-பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்கும்போது இது தெரிகிறது என்றும் வேறு சில அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், மக்கள் என்ன நினைக்கிறார்கள், யாரை ஆட்சி கட்டிலில் உட்கார வைக்கிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும், பல கருத்துக்கணிப்புகள் இதுவரை பொய்யாகியுள்ள நிலையில் இந்த கருத்துக்கணிப்புகளும் பொய்யாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் கிடைக்கும் தகவல்தான் உண்மையானது என்றும், அதுவரை வெளியாகும் தகவல் அனைத்தும் உறுதி செய்யப்படாதவை என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
