செங்கோட்டையனின் 3 வியூகங்கள்.. அமித்ஷாவின் பிளான் A, பிளான் B, பிளான் C.. நீ கூட்டணியில் இருந்தால் தானே ஆட்டம் போடுவ, கூட்டணியில் இருந்தே பாஜகவை விரட்ட பிளான் போடும் ஈபிஎஸ்.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் விஜய்..!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல்களுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு ஏன்…

amitshah eps

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல்களுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு ஏன் நடந்தது? செங்கோட்டையன் முன்வைத்த கோரிக்கைகள் என்ன? எடப்பாடி பழனிசாமியின் எதிர்வினை என்னவாக இருக்கும்? என்பது குறித்த விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் செங்கோட்டையன், அமித்ஷாவிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்று 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற, பிரிந்து இருக்கும் அதிமுக தலைவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். இரண்டு பல்வேறு மூத்த தலைவர்கள் ஒற்றுமையை விரும்பினாலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே இதற்கு தடையாக இருக்கிறார். எனவே எடப்பாடி தொடர்ந்தும் முரண்டுபிடித்தால், அவரை தலைமை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, புதிய ஒரு தலைமையை நியமித்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம். மூன்றாவது அந்த புதிய தலைமைக்கு தானும் பொருத்தமானவர் என்பதால் தன்னை தலைவராக நியமிக்க வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

செங்கோட்டையனின் இந்த சந்திப்பு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கூட்டணி கட்சி தலைவர், தங்கள் கட்சிக்குள்ளேயே உள்ள அதிருப்தியாளருடன் சந்திப்பு நடத்தியது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என எடப்பாடி ஆதரவாளர்கள் கருதுகின்றனர். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என சில மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனினும், அது பாஜகவுடன் உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், எடப்பாடி இப்போதைக்கு அமைதி காக்கிறார்.

இந்தியாவில் ஒரு வலுவான கட்சியாக மாற பாஜக பல்வேறு மாநிலங்களில் “யூஸ் அண்ட் த்ரோ” வியூகத்தை பின்பற்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதன்படி, தமிழகத்திலும் அமித்ஷாவிடம் மூன்று அதாவது பிளான் A, பிளான் B, பிளான் C உள்ளன.

பிளான் A அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடித்து அதில் பங்கு பெறுவது. பிளான் B காலப்போக்கில் அதிமுகவை பலவீனப்படுத்தி, தமிழகத்தில் பாஜகவை ஒரு தனிப்பெரும் கட்சியாக மாற்றுவது. பிளான் C 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று, சட்டமன்றத்தில் தங்கள் பலத்தை அதிகரிப்பது. அதன்மூலம் 2029 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து அதிக எம்பிக்களை பெறுவது.

பாஜகவின் இந்த வியூகத்தின்படி, அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி இந்த இலக்குகளில் ஒன்றாகும். இந்த இணைப்பு முயற்சிகளுக்கு செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களை பயன்படுத்தி, எடப்பாடியின் அதிகாரத்தை கட்டுக்குள் வைக்க பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது.

செங்கோட்டையனின் கோரிக்கைகள் குறித்து அமித் ஷா எந்த உறுதியான பதிலும் அளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பலம் குறித்தும், ஓ.பி.எஸ் மற்றும் செங்கோட்டையன் போன்றவர்களின் பலம் குறித்தும் பாஜகவுக்கு நன்கு தெரியும். எடப்பாடிக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்த அமித்ஷா, எந்த முடிவுக்கும் வரவில்லை.

அதே சமயம், எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். செங்கோட்டையனின் செயல்பாடுகள், அவரது அதிகாரத்தை தானாகவே குறைக்கும் என எடப்பாடி கணக்கு போடுவதாகவும், அமித்ஷாவின் பதில் எடப்பாடியின் நிலையை மேலும் வலுப்படுத்துவதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஒருவேளை தனக்கு எதிராக பாஜக எதாவது காய் நகர்த்தினால், பாஜகவை கூட்டணியில் இருந்து விரட்டி விடவும் அவர் தயங்க மாட்டார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

மொத்தத்தில் தமிழக அரசியல் களம், வரவிருக்கும் தேர்தலை நெருங்கும்போது மேலும் சூடு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜகவின் இந்த வியூகங்கள் தமிழகத்தில் பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.