அமித்ஷாவின் ஒரே ஒரு சென்னை விசிட்.. விஜய் அடுக்கி வைத்த கோட்டை தகர்ப்பு..!

  அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று விஜய் கனவு கண்டு வந்த நிலையில் திடீரென அமித்ஷாவின் ஒரே ஒரு விசிட் அவருடைய கனவுக்கோட்டையை தகர்த்து விட்டதாக கூறப்படுவது தமிழக அரசியலில்…

vijay amitshah

 

அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று விஜய் கனவு கண்டு வந்த நிலையில் திடீரென அமித்ஷாவின் ஒரே ஒரு விசிட் அவருடைய கனவுக்கோட்டையை தகர்த்து விட்டதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் ஆரம்பத்திலேயே கமல் விஜயகாந்த் செய்த தவறை செய்யக்கூடாது என்றும் ஒரு முக்கிய கட்சியுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும் 2031 ஆம் ஆண்டில் தான் தனித்து போட்டி என்ற ரிஸ்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தார்.

அதன்படி அதிமுகவுடன் அவர் மறைமுக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கிட்டத்தட்ட இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. துணை முதல்வர் மற்றும் ஒரு சில அமைச்சர்கள் பதவி ஆகியவற்றை கேட்டு பெற விஜய் திட்டமிட்டு இருந்த நிலையில்தான் திடீரென அமித்ஷா சென்னைக்கு வந்து எடப்பாடி பழனிசாமியை அழைத்து கூட்டணியை உறுதி செய்தார். கூட்டணியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற விஜய்யின் கனவு தகர்ந்து விட்டது. தற்போது அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல் திமுக கூட்டணியை பொறுத்தவரை அந்த கூட்டணி சிந்தாமல் சிதறாமல் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருந்தால் விஜய் கட்சியில் கூட்டணியில் சேர சின்ன கட்சிகள் கூட முன்வரவில்லை என்பது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி வரும் அதிமுக திமுக என இரண்டு கூட்டணிகளை எதிர்த்து முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்க இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் தாக்குப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.