எடப்பாடின்னா எளக்காரமா நினைச்சியா.. எடப்பாடிடா.. அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவே இல்லை.. எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார்: எடப்பாடி பழனிசாமி..1

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு ஒவ்வொருமுறை வரும்போதும், ஒவ்வொரு முறை பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும்போதும் “தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்போது பா.ஜ.க.வும் இடம்பெறும்”…

eps11

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு ஒவ்வொருமுறை வரும்போதும், ஒவ்வொரு முறை பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும்போதும் “தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்போது பா.ஜ.க.வும் இடம்பெறும்” என்றும் கூறி வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இன்று அளித்த பேட்டியில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவே இல்லை என்றும், எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறார். நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தலைவர் நான்தான். நான் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. நான் தான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வேன். அவ்வாறு இருக்கும்போது, கூட்டணி ஆட்சி என்றோ, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்றோ என்னை தவிர வேறு யாரும் சொல்ல முடியாது” என்று கூறி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“நான் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மெத்தனமாக இருந்தார். ஆனால், தற்போது நான் கூட்டணி வைத்தவுடன் அவருக்கு பயம் வந்துவிட்டது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்தது. தி.மு.க. கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி. அதே கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் அது மதவாதக் கட்சியா? இது எந்த விதத்தில் நியாயம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“இந்தக் கூட்டணியில் ஏதாவது சலசலப்பு ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அதெல்லாம் ஒன்றும் முடியாது. இது தெளிவான கூட்டணி, வெற்றி கூட்டணி. அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

பா.ம.க. கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர்கள் வந்தால் பார்த்துக் கொள்ளலாம். இப்போது எதற்கு அந்த கேள்வி? இன்னும் பந்தியிலேயே உட்காரவில்லை, அதற்குள் என்ன சாப்பாடு என்று கேட்கலாமா?” என்று காமெடியாக பதிலளித்தார்.

ஸ்டாலின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றும், தான் செல்லும் இடங்கள் எல்லாம் மக்களைச் சந்தோஷம் தன்னை பார்த்தவுடன் சந்தோஷம் அடைகிறார்கள் என்றும், அதுதான் மக்களின் மனமாற்றத்தின் அறிகுறி என்றும் அவர் கூறினார். “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயர் சரியானதுதான். ஏனென்றால், அந்த கூட்டணியில் உள்ள எல்லோருமே மக்களை பற்றி சிந்திப்பதில்லை என்று இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா என்று கேட்ட கேள்விக்கு, “காலம் கடந்துவிட்டது, இனி அதை பற்றி பேச எதுவும் இல்லை” என்று பதிலளித்தார். அதேபோல், கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இருக்கிறாரா என்று கேட்டதற்கு, “இப்போதைக்கு எங்கள் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் உள்ளது. இனிமேல் சில கட்சிகள் வரலாம்” என்று அவர் தெரிவித்தார்.