தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் அழைத்துள்ளார்.
இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழகம் இதில் கலந்து கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது உறுதி செய்யப்பட்ட தகவலின்படி, நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கட்சியின் சார்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில், விஜய் அல்லது ஆதவ் அர்ஜுனா இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது புஸ்ஸி ஆனந்த் பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் கூட்டத்தில் கலந்து கொண்டால் மாஸ் ஆக இருக்கும், கூட்டமே அவரின் பக்கம் திரும்பி இருக்கும் என தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டு விஜய் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.