அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்? சசிகலா சந்திப்பால் பரபரப்பு..!

  கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டங்களையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். இதனால், செங்கோட்டையனை இழுக்க திமுக உள்பட சில கட்சிகள்…

sengottaiyan

 

கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டங்களையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார்.

இதனால், செங்கோட்டையனை இழுக்க திமுக உள்பட சில கட்சிகள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், செங்கோட்டையன் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், செங்கோட்டையன் சசிகலாவை ரகசியமாக சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தியை சசிகலாவிடம் பகிர்ந்து கொண்டதாகவும் உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த சந்திப்பின் போது, “பொறுமையாக அமைதியாக இருங்கள். இன்னொரு பிளவு அதிமுகவில் ஏற்படக்கூடாது. ஏற்கனவே, நான் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க முயற்சித்து வருகிறேன். இந்த நேரத்தில் மேலும் பிளவு வேண்டாம்,” என்று சசிகலா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருக்க செங்கோட்டையன் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா அணிகளை ஒன்றிணைக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு செங்கோட்டையன் தேர்வு செய்யப்படலாம் என்றும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரகசிய சந்திப்பும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எனினும், இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை இனிவரும் நாட்களில் நடக்கும் அரசியல் சூழலிலிருந்து தான் அறிய முடியும்.