எதிரும் புதிருமாய் நடித்தது போதும்! அ.தி.மு.க – தி.மு.க. ரகசிய கூட்டணியா? மக்கள் மத்தியில் வலுக்கும் சந்தேகம்! புதிய சக்திக்காக காத்திருக்கும் தமிழகம்!

தமிழக அரசியல் வரலாற்றில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. எதிரும் புதிருமாக தங்களை நிலைநிறுத்தி கொண்டாலும், ஆட்சிக்கு வரும்போது எதிர்க் கட்சிகளின் மீது…

mgr karunanidhi

தமிழக அரசியல் வரலாற்றில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. எதிரும் புதிருமாக தங்களை நிலைநிறுத்தி கொண்டாலும், ஆட்சிக்கு வரும்போது எதிர்க் கட்சிகளின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. குறிப்பாக, அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒரு ‘ரகசிய கூட்டணி’யைப் பேணி வருகின்றனவா என்ற கேள்வி மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.

ஊழல் வழக்குகளில் தொடரும் மர்மம்: வேகம் குறையும் நீதி!

2011 முதல் 2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல் வழக்குகளில் குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் இந்த ஆட்சியில் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, “கொடநாடு வழக்கு” உட்பட எந்த முக்கியமான வழக்கிலும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு ஆறு மாதங்களுக்குள் முடிவுக்கு வந்த நிலையில், ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் “கொடநாடு வழக்கில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஊழல் செய்ததாக கூறப்படும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது இதுவரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் சந்தேகத்தை அதிகரிக்க செய்கிறது.

இவையெல்லாம் பார்க்கும்போது, “அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒருவர் மீது ஒருவர் நடவடிக்கை எடுக்காமல் ஒரு ‘புரிந்துணர்வு’டன் செயல்படுகின்றனவா? நம் இருவரை தவிர வேறு ஒரு புதிய அரசியல் சக்தி தமிழகத்தில் தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காகவே இந்த இரு கட்சிகளும் ஆரம்பம் முதலே இந்த நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனவா?” என்ற எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்குகிறது.

வரலாற்றுப் பின்னணியும், தற்போதைய நிலையும்!

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில், கருணாநிதி மீது பெரிய அளவில் ஊழல் வழக்குகள் தொடரப்படவில்லை. ஆனால், கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவரையொருவர் ‘பரம எதிரி’ போல பார்த்துக்கொண்டதால், அவர்களது ஆட்சிக்காலத்தில் ஒருவர் மீது ஒருவர் சில வழக்குகளை தொடர்ந்தனர் என்பது உண்மை. ஆனால், இந்த இரண்டு பெரும் தலைவர்களும் மறைந்த பிறகு, மீண்டும் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தின்படி ஒருவர் மீது ஒருவர் தீவிர நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வலுக்கிறது.

இத்தகைய சூழ்நிலையை மக்கள் சந்தேகக் கண்ணுடனே பார்த்து வருகின்றனர். ஒருவேளை 2026ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தாலும், தற்போதுள்ள தி.மு.க. அமைச்சர்கள் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்பதே காலங்காலமாக நாம் பார்த்துவரும் ஒரு யதார்த்தமாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

“இரண்டு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!” – மக்களின் குரல்!

எனவேதான், “திராவிடக் கட்சிகள் இரண்டையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!” என்று தமிழக மக்கள் மத்தியில் ஒரு பரவலான கருத்து உருவாகியுள்ளது. ஒரு புதிய அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்று நீண்டகாலமாகக்காத்திருந்த மக்களுக்கு, நடிகர் விஜய் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அவர் களமிறங்கியுள்ள “தமிழக வெற்றி கழகம்” மூலமாக, இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் தமிழக அரசியலில் இருந்து விரட்ட வேண்டும்” என்பதுதான் மக்களின் தற்போதைய எண்ணமாக உள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தல், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை கொண்டு வந்து திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கிடைக்குமா? அல்லது பழைய கதை தொடருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.