சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்

By Keerthana

Published:

சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேசியர் அறையில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்திற்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனே தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பாம்புகள் எப்படி வேண்டுமானாலும் அறைக்குள் புகுந்துவிடும். ஏசி இயந்திரத்திற்குள் புகும் வாய்ப்பு உள்ளது. நமது இருசக்கர வாகனத்திற்குள் செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஸ்கூட்டியாக இருந்தால் உள்ளே ஏறி சொகுசாக படுக்கவும் செய்யும்.

இதேபோல் கழிவறையிலும் சில நேரங்களில் பாம்புகள் உள்ளே உட்கார்ந்திருக்கும். வீட்டில் அருகில் புதர்மண்டி கிடக்கும் காடுகள் இருந்தால் அல்லது காடுகள் உள்ள பகுதிகள் அருகில் இருந்தால் பாம்புகள் கண்டிப்பாக வீடுகளுக்குள் அல்லது அலுவலகத்திற்குள் வரும் வாய்ப்பு உள்ளது.

அப்படித்தான் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்குள் பாம்பு புகுந்துள்ளது. நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை.. அந்த பாம்பு எங்கு உட்கார்ந்து இருந்தது என்பது தான் அறிய வேண்டிய ஒன்று.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் ஐ.ஏ.எப். சாலையில் இந்து கல்லூரி இயங்குகிறது.இங்கு அரசு வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்படுகிறது. நேற்று முன்தினம் மாலை காசாளர் அறையில் இருந்த பணம் எண்ணும் எந்திரத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.இதை கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தின் குழுவினர், வங்கியில் உள்ள பணம் எண்ணும் எந்திரத்தில் புகுந்திருந்த பாம்பை லாவகமாக மீட்டார்கள். பிடிபட்ட பாம்பு சுமார் 3 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகை என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர. விஷமற்ற அந்த பாம்பு மரம் ஏறும் தன்மை கொண்டது.

வங்கியின் அருகில் உள்ள மரத்தில் இருந்து ஸ்டோர் ரூம் வழியாக உள்ளே புகுந்துள்ள அந்த பாம்பு, பணம் எண்ணும் எந்திரத்தில் புகுந்திருக்கலாம் என்பது தெரிகிறது. வன ஆர்வலர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். வங்கியில் பாம்பு புகுந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.