டிஎன்பிஎஸ்சியில் ஜெயித்து.. நகராட்சி கமிஷனர் ஆன ‘தூய்மை பணியாளர்’ மகள்.. முதல்வர் தந்த சர்ப்ரைஸ்

By Keerthana

Published:

திருவாரூர்: “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” இந்த பாடல் வரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சேகர் என்வருக்கும் அவது மகள் துர்காவிற்கு பொருந்தும்.. ஏனெனில் தன் மகளை அரசு அதிகாரியாக ஆவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சேகரின் கனவை அவரது மகள் நினைவாக்கி உள்ளார். ஆனால் மகள் அரசு அதிகாரியாக பொறுப்பேற்பதை பார்க்கத்தான் உயிருடன் இல்லை. முதல்வர் ஸ்டாலினிடம் பணியாணை பெற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர் தூய்மை பணியாளர் ஆவார். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் துர்கா. சேகர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி செய்து வந்தார், சேகரின் மனைவி செல்வி வீட்டு வேலைகள் செய்து வந்தார்.

தூய்மை பணியாளர் சேகரும் செல்வியும் தங்கள் மகள் துர்கா பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 வரை வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். பின்னர் மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படிக்க வைத்திருக்கிறார்கள். பின்னர் கடந்த 2015-ல் துர்காவிற்கு 21 வயது இருக்கும் போதே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

துர்காவின் கணவர் நிர்மல் குமார் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்கிறார். நிர்மல் குமாருக்கும் துர்காவிற்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். துர்கா திருமணத்திற்கு பின்னர் மீண்டும் படிக்க தொடங்கினார். இந்த முறை அரசு ஊழியர் ஆக வேண்டும் என்ற கணவருடன் படித்தார். அவரை கணவன் நிர்மல் குமார் ஊக்கப்படுத்தி உள்ளார். தந்தையின் கனவான அரசு ஊழியர் ஆக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற விரும்பிய துர்காவிற்கு ஆரம்பத்தில் தோல்வியே கிடைத்தது.

கடந்த 2016 ல் குரூப் 2 தேர்வு எழுதி இருக்கிறார். ஆனால் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து 2020ல் குரூப் ஒன் தேர்வு எழுதினார். அதில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற முதன்மை தேர்வில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

அதன்பின்னர் இரண்டு குரூப் 4 தேர்வுகளை எழுதி உள்ளார். ஆனால் அதில் கட் ஆப் இல்லை. இதன் காரணத்தினால் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்ற துர்கா, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2024 ல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்கிறார். இவருக்கு பணியாணை முதல்வர் ஸ்டாலின் தற்போது வழங்கி உள்ளார், முதல்வரின் கையால் பணியாணை வாங்கி சேகரின் மகள் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால் அதனை பார்க்கத்தான் துர்காவின் தந்தையான சேகர் உயிருடன் இல்லை..