பொதுவாகப் அரசுப் பள்ளிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள, கிராமப்புற மாணவர்களே அதிகம் பயில்கிறார்கள். அவர்களுக்கு அரசுப் பள்ளிகள்தான் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் சிறந்த கல்விக் கூடமாகத் திகழ்கிறது. ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் மட்டும் இன்னும் நிறைய இடங்களில் மாறவே இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை, கட்டமைப்பு குறைபாடு, போதிய வகுப்புகள் இல்லாதது போன்ற பல காரணங்களும் இருக்கச் செய்கின்றன. ஆனால் அதே சமயம் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர்.
வாழையை வம்புக்கு இழுத்த பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா.. இப்படி ஒரு விமர்சனமா?
இப்படி அன்றும், இன்றும் அரசுப்பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அரசின் இரண்டு கண்களாகப் பார்க்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று கடலூர் மாநகராட்சியில் உள்ள கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேயர் சுந்தரி ராஜா மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பின்னர் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் காலணிகள் அனைத்தும் வெளியே விடப்பட்டிருந்தது.
அப்போது வகுப்பில் இருந்த ஆசிரியையிடம் மாணவர்கள் வகுப்பறைக்குள் காலணி அணிந்து வருவது உங்களுக்குத் தொந்தரவு என்றால் நீங்களும் ஏன் வகுப்பறைக்குள் காலணி அணிந்து வந்து பாடம் நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் மாணவர்களின் காலணியை வெளியே விடச் சொல்லி நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறீர்களா என்றும் கேள்வி கேட்டார்.
அதற்கு ஆசிரியை, “அனைத்து மாணவர்களும் காலணியுடன் வகுப்பறைக்குள் வருவதால் மண், தூசி போன்றவை வருகிறது. இதனால் சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. எனவேதான் காலணிகளை வெளியே விடச் சொன்னோம் என்று பதில் அளித்தார். இனி மாணவர்கள் வகுப்பறைக்குள் காலணி அணிந்து தான் வர வேண்டும் என்றும் அவர்களிடம் தெரிவித்தார் மேயர்.