அரசியலில் கொள்கை, கோட்பாடு, நீதி, நேர்மை எல்லாம் வேலைக்கு ஆகாது.. அரசியலில் வெற்றி ஒன்று தான் பேசும்.. அந்த வெற்றிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. கூட்டணி வைக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் இருக்கும் சீமான், இந்த ஜென்மத்தில் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.. தேர்தல் அரசியலில் எதையாவது செய்து வெற்றி பெற வேண்டும்.. இல்லையெனில் காலப்போக்கில் கொள்கை அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள்.. நடுநிலை பத்திரிகையாளர்கள்மார்ச் 14, 2026, 11:30
திமுகவை வீழ்த்தனும்ன்னா, அதிமுகவோட சேரனும்.. அதிமுகவை வீழ்த்தனும்ன்னா திமுகவோட சேரனும்.. இதுதான் தமிழ்நாட்டோட விதி.. 91ல்ல திமுகவோட சேர்ந்த மூப்பனார் ஜெயலலிதாவை வீழ்த்தினார்.. 96ல்ல அதிமுகவோட சேர்ந்து கருணாநிதியை வீழ்த்தினார்.. 2011ல்ல ஜெயலலிதாவோட சேர்ந்து திமுகவை விஜயகாந்த் வீழ்த்தினார்.. 2016ல்ல கருணாநிதியோட சேர்ந்திருந்தா ஜெயலலிதாவை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் மக்கள் நல கூட்டணின்னு திசை மாறிட்டார்.. விஜய் நிலையும் அதுதான்.. திமுகவை வீழ்த்தனும்ன்னா, அவருக்கு ஒரே ஆப்ஷன் அதிமுக தான்..!மார்ச் 14, 2026, 10:49
விஜய்யோட உண்மையான டார்கெட் அரசியல் எதிரியும் இல்லை, கொள்கை எதிரியும் இல்லை.. அதிமுகவை 3வது இடத்திற்கு தள்ளுவது தான் அவரது நோக்கம்.. ஐசியூவில் இருக்கும் அதிமுகவை எப்படி அவரே நார்மல் வார்டுக்கு கொண்டு வர முயற்சிப்பார்.. விஜய்யின் பிளானே வேற.. இந்த தேர்தலில் ஒரு திராவிட கட்சியை தோற்கடிக்குறது இல்லை, சுத்தமா அழிச்சிடனும், அதுக்கு அப்புறம் இன்னொரு திராவிட கட்சியோட ஈசியா மோதிடலாம்.. இது புரியாம நிறைய பேரு விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு போவாருன்னு பேசிக்கிட்டு இருக்காங்க.. விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள்..!மார்ச் 13, 2026, 19:06
திமுகவை தோற்கடித்தால் மட்டும் பத்தாது.. திமுக காணாமல் போக வேண்டும்.. விஜய் என்ன கேட்டாலும் கொடுத்துருங்க.. வேற வழியில்லை.. திமுகவை வீட்டுக்கு அனுப்பியே ஆகனும்.. திமுகவை தோற்கடிச்சாச்சுன்னா, அதுக்கு அப்புறம் அதிகாரம் இல்லாத அவங்கள என்ன செய்யனும்ன்னு எங்களுக்கு தெரியும்.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது, விஜய் கூட்டணிக்கு வந்தே ஆகனும்.. எடப்பாடியாருக்கு நெருக்கடி கொடுத்ததா டெல்லி அதிகார மையம்?மார்ச் 13, 2026, 08:24
அமித்ஷா பிளான் சக்சஸ்.. திமுக கூட்டணிக்கு போன காங்கிரசுக்கு அதிகபட்சம் 5 தொகுதியில் தான் வெற்றி கிடைக்கும்.. திமுகவே தோற்கடிச்சிருவாங்க.. தவெகவுடன் சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர்ந்திருக்கும்.. எனவே காங்கிரஸை கிட்டத்தட்ட ஒழிச்சு கட்டியாச்சு.. அடுத்தது தவெகவை தனிமைப்படுத்தியாச்சு.. திமுக ஓட்டை விஜய் அதிகம் பிரிச்சா என்.டி.ஏ கூட்டணிக்கு தான் சாதகம்.. கொஞ்ச நாள் எடப்பாடியை முதல்வரா வச்சிருந்து, அப்புறம் அவரை டெல்லிக்கு மந்திரியாக்கி, தமிழகத்தில் முதல்வர் பதவியை பிடிச்சிடலாம்.. பிளான் சக்சஸ்.. ஓகேவா?மார்ச் 11, 2026, 11:35
திமுக ஆட்சியை இறக்கிட்டு அதிமுக ஆட்சிக்கு வர்றதுக்கு நான் எதுக்கு அரசியலுக்கு வரனும்.. முடிஞ்சா ஒரே தேர்தலில் ரெண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்புவேன்.. மக்கள் என்னை நம்பினால் அவர்களுக்கு சேவை செய்வேன், மக்கள் நான் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டா, மறுபடியும் சினிமாவுக்கு போயிருவேன்.. இன்னொரு கூட்டணியில போயி பத்தோடு பதினொன்னா இருக்க நான் தயாரில்லை.. ஒரு முடிவோடு இருக்கும் விஜய்?மார்ச் 9, 2026, 21:02
திமுக கூட்டணி இனிமேலும் உடைய வாய்ப்பு.. அப்படி உடைஞ்சதுன்னா அதுக்கு ஒரே காரணம் பிரேமலதாவாகத்தான் இருக்கும்.. வைகோவுக்கு கொடுக்காத ராஜ்யசபா சீட் எல்.கே.சுதீஷுக்கு கொடுத்தால் அவருக்கு கோபம் வருமா வராதா? 15 வருஷமா கூட்டணியில இருக்குற கட்சிக்கு கொடுக்குறதை விட அதிக சீட் தேமுதிகவுக்கு கொடுத்தா திருமாவளவனுக்கு கோபம் வருமா வராதா? 10 சீட்டுக்கும் ராஜ்யசபா சீட்டுக்கும் தேமுதிக வொர்த்தே இல்லை.. விஜயபிரபாகரன் ஏன் இன்னும் கருத்து சொல்லவே இல்லை? கேள்வி எழுப்பும் அரசியல் விமர்சகர்கள் ..!மார்ச் 8, 2026, 10:58
28 வாங்கிட்டோம்ன்னு சந்தோஷப்பட வேண்டாம்.. அந்த 28ல்ல எத்தனை ஜெயிக்க போறாங்க, எத்தனையை ஜெயிக்க விடாம பண்ண போறாங்கன்னு தேர்தல் ரிசல்ட்டுக்கு அப்புறம் தான் தெரியும்.. அந்த ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும் தான் கன்பர்ம்.. ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? அப்படியே வந்தாலும் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏறுவாரா? கூட்டணி ஜெல் ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..மார்ச் 7, 2026, 22:10
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜகன்னு எல்லா கட்சியையும் பகைச்சுகிட்டு ஒருவர் எப்படி அரசியல் பண்ண முடியும்? யாராவது ஒருத்தர் சப்போர்ட்டாவது வேண்டாமா? அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தான் இப்போதைக்கு புத்திசாலித்தனம்.. தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அதன்பின் அரசியலே பண்ண முடியாது.. ரெண்டு பேரும் சேர்ந்து சிதைச்சிடுவாங்க.. விஜய்க்கு அறிவுரை சொல்லும் அரசியல் விமர்சகர்கள்..!மார்ச் 7, 2026, 17:59
கேப்டன் விஜயகாந்தே 13 சதவீதத்துல நின்ன ஊர் இது! சிங்கிளா வந்து சீன் போடுறது ஈஸி, ஆனா 234 தொகுதியையும் தாங்குற அளவுக்கு தோள்ல பலம் விஜய்க்கு இருக்கா? வெறும் 10% ஓட்டைப் பிரிச்சு, இன்னொருத்தரை ஜெயிக்க வைக்கிறதுக்கு எதுக்கு விஜய் அரசியலுக்கு வரனும்? இது 2026… இங்க திரைமறைவு அரசியலுக்கு இடமில்லை! ஒரு பக்கம் 50 வருஷ அனுபவம், இன்னொரு பக்கம் இள ரத்தம்! இந்த தேர்தல் விஜய்க்கு ‘வாழ்வா சாவா’ போராட்டம்..மார்ச் 7, 2026, 16:59
வலிமையான கூட்டணி அமைத்த திமுக.. கூட்டணியை சரியாக அமைக்க தெரியாத ஈபிஎஸ்.. கூட்டணியே இல்லாமல் தனித்து விடப்பட்ட விஜய்.. வழக்கம் போல் தனியாக போட்டியிடும் சீமான்.. 4 முனை போட்டியில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.. ஆளும் அரசுக்கு எதிர்ப்பு இருந்தாலும், எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக பிரிவதால் மக்கள் விரும்பவில்லை என்றாலும் அடுத்ததும் திமுக ஆட்சி தான்.. திமுகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவில்லை என்றால் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது..!மார்ச் 7, 2026, 10:56
திமுக + காங்கிரஸ் கூட்டணி குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லாத சோனியா, ராகுல், பிரியங்கா.. இன்னும் ஏதேனும் திட்டம் இருக்கிறதா? கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் வெளியேற வாய்ப்பா? கார்கே கூட வாயை திறக்காதது ஏன்? செல்வப்பெருந்தகையும் ப.சிதம்பரமும் மட்டும் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்ன தான் நடக்குது?மார்ச் 6, 2026, 17:17