WhatsApp Image 2022 10 01 at 5.18.46 PM

#Viralvideo கண்டக்டர் டிக்கெட் கொடு; நடத்துனர் உடன் வாக்குவாதம் செய்யும் பெண்கள் வீடியோ!

ஈரோட்டில் அரசு பேருந்து ஒன்றில், 4 பெண்கள் இலவச பயணம் மேற்கோள்ள மறுத்து நடத்துனரிடம் கட்டண பயண சீட்டு கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

சித்தோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழித்தடத்தில் ராயர்பாளையம் என்ற இடத்தில் அரசு பேருந்தில் ஏறிய 4 பெண்களுக்கு இலவச பயணத்திற்கான பயண சீட்டை நடத்துனர் வழங்கி உள்ளார். இதனை பெற மறுத்து தங்களுக்கு கட்டண பயண சீட்டை வழங்குமாறு வாக்குவாதத்தில் அந்த பெண்கள் ஈடுபடும் காட்சிகள் சோசியல் கட்டணம் பெறவில்லையெனில் இலவச பயணத்தை மறுத்த பெண்கள் நால்வரும் பாதி வழியில் இறங்கி உள்ளனர்.

அதன்பின் இளைஞர் ஒருவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் மற்றொரு வீடியோவில், கட்டணம் பெற மறுத்து நடத்துனர் தங்களை பாதி வழியில்இறக்கி விட்டதாக கூறி உள்ளனர். அமைச்சர் பெண்களை ஓசி பயணம் என குறிப்பிட்டதன் காரணமாகவே இலவச பயணத்தை தவிர்த்து கட்டண சீட்டு கேட்டதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்சிகள் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே கோவையில் இது போன்ற ஒரு வீடியோ வைரலானது. அது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அதிமுக தொழில்நுட்ப பிரிவினர் (ஐ.டி விங்க்) அதனை பரப்பியது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அதை போன்றே ஈரோட்டிலும் வீடியோ வெளியாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.