கைநழுவி போனது கோப்பை.. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றிலும் சொதப்பிய இந்தியா..!

By Bala Siva

Published:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஸ்திரேலியா அணி இந்தியாவை 240 ரன்களுக்குள் சுருட்டியது. இதனை அடுத்து 241 என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடிய நிலையில் முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவில் விழுந்தாலும் அதன் பிறகு அபாரமாக விளையாடினர். ஒரு பந்தை கூட வீண் செய்யாமல் சிங்கிள் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்கோரை உயர்த்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஒரு கட்டத்தில் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாச தொடங்கினார்.

மேலும் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சும் மோசமாக இருந்தது. கிட்டத்தட்ட 15 ரன்கள் உதிரிகளாக கொடுத்த இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கவும் தவறிவிட்டனர். அது மட்டும் இன்றி மிக மோசமான பீல்டிங் இந்தியா அணிக்கு பாதகமாக இருந்தது.

மிகவும் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளர்களான பும்ரா, ஷமி ஆகிய இருவரும் முதல் மூன்று விக்கெட்டை எடுத்த பின்னர் விக்கெட் எடுக்கும் முயற்சியில் தோல்விதான் கிடைத்தது. ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் சுழல் பந்து கொஞ்சம் கூட திரும்பவில்லை என்பது ஒரு மைனசாக இருந்தது. சிராஜின் பவுலிங்கும் இன்று எடுபடவில்லை.

அதேபோல் பில்டிங்கிலும் இந்தியா அணியினர் சொதப்பினர். பல பவுண்டரிகளை தடுத்து இருக்க வேண்டிய நிலையில் மிகவும் சுமாரான பில்டிங் இருந்தது. மொத்தத்தில் இந்திய அணி இன்று பவுலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றிலும் சொதப்பியதுதான் தோல்விக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது