தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு அவ்வளவு சந்தோசமாக அமையவில்லை. ஏனென்றால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணியின் மிகுந்த தீவிரமாக விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். அதேபோல் இன்றைய தினம் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான வரலாற்று போட்டியாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணி இதோடு 1000 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியோடு சேர்த்து இதுவரை இந்திய அணி ஆயிரம் ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் 431 போட்டிகளில் தோல்வியும், 9 போட்டிகள் டிராவில், 41 போட்டிகள் எந்தவித முடிவின்றி முடிந்தன.
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து அதிக வெற்றிகள் பெற்ற அணியாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமே இதுவரை 500 வெற்றிகளுக்கு மேல் பெற்றுள்ள அணிகளாக உள்ளன.
இந்திய அணி விளையாடிய முதல் ஒருநாள் போட்டிக்கு அஜித் வாடேகர் கேப்டனாக திகழ்ந்தார். இந்தியாவின் 100வது ஒருநாள் போட்டியில் கேப்டனாக கபில்தேவ் திகழ்ந்தார். இந்தியாவின் 500வது ஒரு நாள் போட்டியில் கேப்டனாக சவுரவ் கங்குலி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆயிரமாவது ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக களமிறங்கியுள்ள ரோஹித் சர்மாவிற்கு இது ஒரு வரலாற்று குறிப்பில் இடம் பெறவேண்டிய போட்டியாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.