நேற்றைய தினம் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. ஏனென்றால் நேற்று மும்பை அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அந்த முடிவு சரியானதாக அமைந்தது. மும்பையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை அணி 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இருந்தது. சென்னையில் அதிகபட்சமாக தல தோனி மட்டும் 33 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் மும்பை வீரர்கள் களம் இறங்கினார. ஆனால் அவர்களாலும் சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இருப்பினும் 103 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளைப் பெற்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியோடு மோதுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இவை முக்கியமான போட்டியாக காணப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளும் தகுதி சுற்றுக்கு செல்ல தொடர்ந்து வரும் ஆட்டங்களில் வெற்றி பெறவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது.
எனவே மீதமுள்ள ஆட்டங்களில் எப்படியாவது வெற்றி பெற்றால் மூன்று அல்லது நான்காவது இடத்திற்கு சென்று விடலாம் என்ற வாய்ப்பு காணப்படுகிறது.
மேலும் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்று வந்தால் தகுதி சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு உள்ளது. இன்று இரவு நடக்கும் இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் இரவு 07:30 மணிக்கு தொடங்குகிறது.