இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போன்ற அனைத்துப் போட்டிகளும் கொண்ட தொடர் உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2க்கு 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இதனால் ஒருநாள் போட்டியில் ஆவது தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. அதாவது 3 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணியை மொத்தமாக தென்ஆப்பிரிக்கா அணி வாஸ் அவுட் செய்தது.
நேற்றைய தினம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் நாங்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
நேற்றைய தினம் சகாரின் ஆட்டம் நன்றாக இருந்தது என்றும் அவர் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தார். நல்ல வாய்ப்பு இருந்தது இருப்பினும் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். தோல்வி குறித்து மனம் திறந்து பேசுவதால் எந்த ஒரு வெட்கமும் இல்லை என்றும் அவர் கூறினார். வீரர்களின் ஷாட் செலக்சன் மிகவும் மோசமாக இருந்ததாகவும் இந்திய அணியின் கேப்டன் ராகுல் கூறினார்.