டெஸ்ட் போட்டியில் 25000 ரன்கள் எடுத்த விராத் கோஹ்லி.. இதற்கு முன் இந்த சாதனை செய்தவர்கள் யார் யார்?

By Bala Siva

Published:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 263 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 113 ரன்களும் ஆஸ்திரேலிய அணி எடுத்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்கள் எடுத்ததால் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து நான்கு விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டையும் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் இந்த போட்டியில் விராட் கோலி 25000 ரன்கள் என்ற சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 0 அவர் 549 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளார். இதற்கு முன் 25 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாய்ண்டி,ங் கல்லீஸ் மற்றும் குமார சங்கரகார ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது