சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தற்போது சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடி வருகின்றன. சேப்பாக்கத்தில் 17 வருடங்களாக வெற்றி பெறாத RCB, இந்த முறையாவது அந்த வரலாற்றை மாற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கும் நிலையில் இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி ஒரு அற்புதமான சாதனை செய்துள்ளார்.
இன்று விராட் கோஹ்லி 30 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து, நூர் அகமது பந்தில் அவுட் ஆனாலும், இந்த இன்னிங்ஸுடன் அவர் IPL வரலாற்றில் CSKக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். இதுவரை CSKக்கு எதிராக 1084 ரன்கள் எடுத்துள்ளார். அவரை அடுத்து 1057 ரன்கள் அடித்த ஷிகர் தவான் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
IPL வரலாற்றில் CSKக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:
விராட் கோஹ்லி – 1084
ஷிகர் தவான் – 1057
ரோஹித் சர்மா – 896
தினேஷ் கார்த்திக் – 727
டேவிட் வார்னர் – 696
விராட் கோஹ்லியின் மெதுவான இன்னிங்ஸ் காரணமாக, இரண்டு முக்கிய சாதனைகளை அவர் தவறவிட்டார். இன்னும் 55 ரன்கள் எடுத்திருந்தால், அவர் 13,000 T20 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருப்பார். ஆனால், 24 ரன்கள் குறைவாக இருந்ததால் அந்த சாதனையை அவர் தவறவிட்டார். மேலும், ஒரு T20 ஓப்பனராக 5000 ரன்கள் அடைய ஏழு ரன்கள் குறைவாகவே இருந்து விட்டது.