ஒரே பந்தில் விராத் கோஹ்லி சதம்.. இந்தியா வெற்றி.. வெளியேறியது பாகிஸ்தான்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரே பந்தில் இந்தியாவின் வெற்றி மற்றும் விராத் கோலியின் சதம் ஆகிய இரண்டும் நிகழ்ந்ததை அடுத்து, இந்திய ரசிகர்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சாம்பியன்ஸ்…

virat
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரே பந்தில் இந்தியாவின் வெற்றி மற்றும் விராத் கோலியின் சதம் ஆகிய இரண்டும் நிகழ்ந்ததை அடுத்து, இந்திய ரசிகர்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சஹில் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 62 ரன்கள் சேர்த்தார்.

இதனை அடுத்து 242 என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. இந்த நிலையில், ரோகித் சர்மா 20 ரன்களுக்கும், சுப்மன் கில் 46 ரன்களுக்கும் அவுட் ஆனாலும், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிக அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். குறிப்பாக, விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது அவரது 51வது சதமாகும்.

இந்தியா வெற்றி பெற 4 ரன்கள் தேவையான நிலையில், விராட் கோலி ஒரு பவுண்டரி விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்ததோடு, தனது சதத்தையும் சரியாக பூர்த்தி செய்தார். இதனை அடுத்து, விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன.

நேற்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. நேற்றைய இந்திய அணியின் வெற்றியின் மூலம், நான்கு புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.