நடிகர் விஜய் பிறந்தநாளன்று தொடங்கும் ‘TNPL கிரிக்கெட் தொடர்’; முதல் ஆட்டம் நெல்லையில்;

பொதுவாக நம் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வைப்பதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் உள்ள வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க தான். இதனை பயன்படுத்தி பலரும் இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் தற்போது…

TNPL 2021 Auction Date Time Players Draft Retained Players List

பொதுவாக நம் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வைப்பதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் உள்ள வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க தான். இதனை பயன்படுத்தி பலரும் இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் மெல்லமெல்ல தமிழக வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஐபிஎல் மட்டுமின்றி தமிழகத்தில் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரும் காரணமாக உள்ளது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎல் தொடர் ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி முதல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்த்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி மோதுகிறது.

இந்தாண்டு நெல்லை, சேலம், கோவையில் உள்ள மைதானங்களில் மட்டுமே டிஎன்பிஎல் போட்டி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

play-off சுற்றுகள் சேலம் மற்றும் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆட்டம் ஜூலை 31 ஆம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎல் அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன