ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இன்று நடைபெற்ற போட்டியில் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். ஒரு ஐபிஎல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே மூன்றாவது முறையாக சிக்ஸ் அடித்த உலகின் ஒரே வீரராக வரலாற்றில் இடம் பெற்றார்.
ஐபிஎல் போட்டியில் இன்னிங்ஸ் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த வீரர்கள் மொத்தம் 8 பேர் உள்ளனர். ஆனால், மும்பை நகரைச் சேர்ந்த 23 வயதான ஜெய்ஸ்வால் இந்த சாதனையை மூன்று முறை செய்து காட்டியுள்ள ஒரே வீரர் என்பது தான் உலக சாதனை.
பெங்களூருவில் நடந்த இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கினார். 206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நடந்த இந்த போட்டியின் முதல் பந்தில், புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை நேராக சிக்ஸாக மாற்றினார்.
ஐபிஎலில் முதல் பந்தில் அதிகம் சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியல் இதோ:
3 முறை – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
1 முறை – நமன் ஓஜா (ராஜஸ்தான் ராயல்ஸ்)
1 முறை – மயங்க் அகர்வால்
1 முறை – சுனில் நரேன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
1 முறை – விராட் கோலி (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு)
1 முறை – ராபின் உத்தப்பா
1 முறை – பில் சால்ட் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
1 முறை – பிரியாஞ்ஷ் ஆர்யா (பஞ்சாப் கிங்ஸ்)
ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் இதுவரை 8 போட்டிகளில் அவர் 4 அரைசதங்களை அடித்து 307 ரன்கள் குவித்துள்ளார். 2023 ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணிக்காக அறிமுகமான ஜெய்ஸ்வால், தற்போது மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் அடித்த நிலையில் ராஜஸ்தான் அணி 9 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.