தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.
இன்றைய தினம் இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தற்போது இந்தியா தனது 50 ஓவர்களில் 288 ரன்களை தென்னாப்பிரிக்காவுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
அதன்படி இந்தியாவுடனான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 85 ரன்களும், கேப்டன் கேஎல் ராகுல் 55 ரன்களும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்க அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 2 விக்கெட்டுகளும், மார்க்ரம், மகலா, மகாராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.