12 அணிகள் மோதும் 9வது புரோ கபடி போட்டிகள் இன்று பெங்களூருவில் தொடங்க உள்ளது.
ஒன்பதாவது புரோ கபடி லீக் 2022 ஆம் ஆண்டு இன்று இரவு பெங்களூருவில் தொடங்க உள்லது. கடந்த ஆண்டு பயோ-பப்பில் நடத்தப்பட்ட லீக்கிற்கு பிறகு, இந்த முறை பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
வழக்கமாக புரோ கபடி போட்டிகள் அணியின் சொந்த மாநிலத்தை அடிப்படையாக கொண்டு கேரவன் முறையில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பயோபபுள் முறையில் வீரர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு, அனைத்து போட்டிகளும் அங்கேயே நடத்தப்பட்டன.
தற்போது பயோ பபுள், கேரவன் என இரண்டு முறைகளும் இல்லாமல், புரோ கபடி போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு மூன்று மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மூன்று வெவ்வேறு கட்டங்களாக போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக புரோ கபடி போட்டிகள் 2 நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது எவ்வித கொரோனா கட்டுப்பாடும் இன்றி கபடி போட்டிகள் நடத்தப்பட உள்ளது, ரசிகர்களை மைதானம் நோக்கி உற்சாகமாக படையெடுக்க வைத்துள்ளது.
முதற்கட்ட போட்டிகள் இன்று (அக்டோபர் 7) பெங்களூரில் உள்ள ஸ்ரீ காந்தீரவா உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. இரண்டாவது கட்டமாக 27 ஆம் தேதி புனேவில் உள்ள பாலேவாடியில் உள்ள ஸ்ரீ சிவ சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. மூன்றாவது கட்டத்திற்கான அட்டவணை இதுவரை வெளியிடவில்லை.