இந்திய அணியின் கிரான் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி.!!

சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டு வருகிறது. நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து வெற்றியினை பெற்றுக்கொண்டு வருகின்றனர். அதிலும் இன்றைய…

202205270828466263 Tamil News Chess pragyanantha 2nd place SECVPF

சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டு வருகிறது. நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து வெற்றியினை பெற்றுக்கொண்டு வருகின்றனர்.

அதிலும் இன்றைய தினம் இந்திய மகளிர் அணி பி பிரிவில் விளையாடிய வீராங்கனைகள் தொடர்ந்து வெற்றியினை பெற்று வந்தனர். பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரக்யானந்தா அணி முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணியின் கிரான் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அதிபன் பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளனர். எஸ்டோனியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பி அணி முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

பிரக்ஞானந்தா மற்றும் அதிபன் பாஸ்கரன் இருவரும் தங்களது 41 வது நகர்வுகளின் போது வெற்றி பெற்றனர்.

ஏற்கனவே பிரக்ஞானந்தாவை பார்த்து உலக நாடுகள் பயந்து கொண்டுள்ள நிலையில் அவரின் வெற்றியானது பலருக்கும் மேலும் பதற்றத்தை கொடுத்துள்ளது. இவர் ஏற்கனவே நடப்பு சாம்பியனை இரண்டு முறை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன