இந்தியர்களின் கிரிக்கெட் திருவிழாவாக காணப்படுவது இந்தியன் பிரீமியர் லீக் தான். கடந்த ஐபிஎல் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் இணைந்து உள்ளது.
ரசிகர்கள் எப்போது ஐபிஎல் 2022 ஏலம் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 2022 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. பதினைந்தாவது ஐபிஎல் டி20 தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் ஏலம் பெங்களூரில் தொடங்கிவிட்டது.
இதில் 10 அணிகளுக்கு பெங்களூரில் இன்றும் நாளையும் நடைபெறும் ஏலத்தில் சுமார் 590 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நாற்பத்தெட்டு வீரர்களின் அடிப்படை விலை இரண்டு கோடி ஆகவும் , 20 வீரர்களின் அடிப்படை விலை 1.50 கோடி ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரர் ஷிகர் தவானை ரூபாய் 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி.
அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ 5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி. ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸை ரூபாய் 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.