2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றது. இந்த நிலையில் t20 வேர்ல்டு கப் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோத உள்ளது.
ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் உடனே மோதியதும் குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனை சரிகட்டும் விதமாக 2022ஆம் ஆண்டு டி20 போட்டி இருக்குமா? என்றும் எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளது.
இந்த வேர்ல்ட் கப் t20 தொடர் ஆஸ்திரேலியா நாட்டில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 16 நாடுகள் விளையாட உள்ளதாகவும் கூறியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.
இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரிட்சை மேற்கொள்கிறது. அக்டோபர் 27-ஆம் தேதி இந்தியா குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியோடு மோதுகிறது.
அக்டோபர் 30-ஆம் தேதி இந்தியா-தென்ஆப்பிரிக்கா பலப்பரிட்சை மேற்கொள்கிறது. நவம்பர் 2ஆம் தேதி வங்கதேசத்துடன் இந்தியா மோதுகிறது. நவம்பர் 6ஆம் தேதி இந்தியா குரூப் பி பிரிவில் 2ஆம் இடம் பிடிக்கும் அணியுடன் மோதுகிறது.
இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நவம்பர் 9, 10 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.